இந்தியா

இந்த நேரத்தில் இது தேவைதானா?: சந்திரபாபு நாயுடுக்கு வலுக்கும் கண்டனம்!!

இந்த நேரத்தில் இது தேவைதானா?: சந்திரபாபு நாயுடுக்கு வலுக்கும் கண்டனம்!!

webteam

தெலங்கானாவில் இருந்து சாலை மார்க்கமாக ஆந்திராவுக்கு வந்த சந்திரபாபு நாயுடுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

மார்ச்22ம் தேதி தெலங்கானாவில் ஐதராபாத்திற்குச் சென்றார் சந்திரபாபு நாயுடு. அடுத்த இருநாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர் அங்கேயே தங்கினார். இந்நிலையில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகு அவர் சாலை மார்க்கமாக ஆந்திராவுக்கு திரும்பியுள்ளார். அவர் சாலையில் வந்ததை அடுத்து அவரது தொண்டர்கள் அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர். இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. நாடே ஊரடங்கை கடைபிடித்துக்கொண்டு இருக்கும் போது இந்த ஊர்வலம் தேவைதான என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் காடிகோடா ஸ்ரீகாந்த் ரெட்டி,''ஊரடங்கு உத்தரவை மொத்த நாடும் பின்பற்றி வருகிறது. ஆனால் சந்திரபாபு நாயுடுவுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் ஊரடங்கை மதிக்காமல் மலர் தூவி வரவேற்பு அளித்துள்ளனர். யாருமே முகக்கவசம் அணியவில்லை. ஒரு மூத்த அரசியல் தலைவராக இருக்கும் அவரால் எப்படி இதைப் போன்ற காரியத்தில் ஈடுபட முடிகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சந்நிரபாபு நாயுடு சிவப்பு மண்டலத்திலிருந்து வந்துள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.