இந்தியா

’5 வருடமாக சூப்பர் எமர்ஜென்சி’: மம்தா பானர்ஜி

’5 வருடமாக சூப்பர் எமர்ஜென்சி’: மம்தா பானர்ஜி

webteam

’நாடு ஐந்து வருடமாக சூப்பர் எமர்ஜென்சியை சந்தித்து வருகிறது’ என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்திரா காந்தியின் பரிந்துரையை ஏற்று அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ரூதின் அலி அகமது நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினர். 

நெருக்கடி நிலை வரப்பட்டு 44 ஆண்டுகள் ஆகிறது. அதை நினைவுபடுத்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ’’கடந்த 5 வருடமாக, இந்த நாடு ’சூப்பர் எமர்ஜென்சி’யை சந்தித்து வருகிறது. வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை காக்க போராட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.