இந்தியா

பரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்

பரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்

webteam

கர்நாடாகாவில் உள்ள ராஜிவ்காந்தி சுகாதார பல்கலைகழகம் இன்று தேர்வு தொடர்பான சில புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வில் வெற்றி பெற சில விஷயங்களை இப்போதும் செய்து வருகிறார்கள். குறிப்பாக தங்களது மத அடையாளங்களை குறிக்கும் வகையிலான உருவம், எழுத்துகளை கொண்டு வினாத்தாளை தொடங்குபவை. 

சமீப காலமாக நடந்த தேர்வுகளில் இந்த முறை அதிகம் பின்பற்றப்பட்டு வந்ததை கண்டுபிடித்தது ராஜிவ் காந்தி பல்கலைகழகம். இதனை அடுத்து மாணவர்கள் தங்களது வினாத்தாளில் எந்த மத அடையாளங்களையும் எழுதவோ, வரையவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டாளர் சார்பில் இந்த சுற்றறிக்கை கடந்த  அக்டோபர் 1-ம் தேதி அனுப்பப்பட்டது.

ஒருவேளை மாணவர்கள் எழுதினால், அவர்களது வினாத்தாள் கருத்தில் கொள்ளப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் மற்ற செயல், விடையின் இடையே கடிதம் எழுதுவது போன்ற செயல்களையும் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது