இந்தியா

“கொரோனா வதந்திகளை நம்பாமல் மருத்துவரை அணுகுங்கள்” - பிரதமர் மோடி அறிவுரை

“கொரோனா வதந்திகளை நம்பாமல் மருத்துவரை அணுகுங்கள்” - பிரதமர் மோடி அறிவுரை

webteam

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பாமல் மக்கள் மருத்துவரை அணுக வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கணோளி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் நேரடியாக உரையாற்றும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. கவுகாத்தி மற்றும் டெராடூன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பிரதமர் மோடி காணோளிக் காட்சிகள் மூலம் உரையாற்றினார். அப்போது மக்களிடன் உள்ள சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்து பேசினார்.

பின்னர் மக்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர், “கொரோனா குறித்த வதந்திகள் வேகமாக பரவுகின்றன. மக்கள் இதை சாப்பிட வேண்டாம், இதை செய்ய வேண்டாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிலர் இதை சாப்பிடுங்கள் கொரோனா வைரஸை தவிர்க்கலாம் என சிலவற்றை குறிப்பிடுகின்றனர். நாம் இதுபோன்ற வதந்திகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், “நமது குடும்பத்தினர் கூட சில நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படலாம். அதற்காக சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசங்களையும், கையுரைகளையும் அணியுங்கள். பிறரிடம் இருந்து சற்று விலகியிருங்கள். அதேசமயம் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பாமல், எதுவாக இருந்தாலும் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.