திரிணாமுல் காங்கிரஸில் இருந்து 41 பேர் விலகத் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு அவர்கள் பாஜகவில் இணைந்தால், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு கவிழும் என்று பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா
இந்த ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய தயாராக இருக்கும் 41 எம்.எல்.ஏக்களின் பட்டியல் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். “பாஜகவில் சேர விரும்பும் 41 எம்எல்ஏக்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. இந்த சட்டமன்ற உறுப்பினர்களை நாங்கள் பாஜகவின் கணக்கில் எடுத்துக் கொண்டால், மம்தா பானர்ஜி அரசாங்கம் கவிழும். ஆனால் கட்சியில் யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக்கூடாது என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சட்டமன்ற உறுப்பினர்களில், யார் சரியானவர்கள் இல்லையோ அவர்களை நாங்கள் சேர்க்க மாட்டோம் ”என்று அவர் கூறினார்
கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கான பெருமையைப் பெற முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் விஜயவர்ஜியா. தனது அரசு மாநிலத்தில் இலவசமாக தடுப்பூசி போடுவதாக மம்தா பானர்ஜி கூறி வருவதாகவும், ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு தான் தடுப்பூசி செலவுகளைச் சுமந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.