இந்தியா

பொது முடக்க காலத்தில் பிஎஃப் சேமிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.39,000 கோடி.!

பொது முடக்க காலத்தில் பிஎஃப் சேமிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.39,000 கோடி.!

Veeramani

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  (ஈ.பி.எஃப்.ஓ) கணக்குகளில் இருந்து மார்ச் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை, 39,403 கோடியை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் நேற்று மக்களவையில் அறிவித்தது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (ஈ.பி.எஃப்.ஓ) உறுப்பினர்கள் மார்ச் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை, 39,403 கோடியை திரும்பப் பெற்றுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் திங்களன்று மக்களவையில் அறிவித்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தாதாரர்கள் அதிகபட்சமாக, 7,838 கோடியை திரும்பப்பெற்றுள்ளனர், கர்நாடகா உறுப்பினர்கள் இதுவரை 5,744 கோடியை திரும்பப்பெற்றுள்ளனர். அதுபோல தமிழகம் (புதுச்சேரி உட்பட) 4,985 கோடியை திரும்பப் பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் டெல்லியில் மொத்த இபிஎஃப் திரும்பப் பெறுதல்  2,940.97 கோடியாக இருந்தது.

1.04 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் இருந்து தொகையை திரும்பப்பெற்றுள்ளனர்.கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு காரணமாக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்காக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் (பி.எம்.ஜி.கே.ஒய்) ஒரு பகுதியாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று  மக்களவையில் அமைச்சர்  தெரிவித்தார்.