எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சௌமியா சுவாமிநாதன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், “மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது” என்று அழுத்தமாக தெரிவித்திருந்தார்.
மேலும், “சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தவகையில், நோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொண்டால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது தொடர்பான தகவல்களை பொது நல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.
பதில்: antibiotic என்பது பாக்டீரியாக்களை கொல்லும் மருந்து. பருவகால காய்ச்சல்கள் பெரும்பாலும் வைரஸால் உண்டாகக்கூடியது. வைரஸ் காய்ச்சல்களுக்கு பாக்டீரியாக்களை கொல்லும் antibiotic எடுப்பது என்பது, முற்றிலும் தேவை இல்லாத ஒன்று.
Antimicrobial Resistance: அதையும் மீறி பரிந்துரையின்றி தேவையற்ற நேரங்களில் Antibiotics எடுத்துக்கொண்டால் அது Antimicrobial Resistance ஐ உடலில் உருவாக்கும். அதவாது தேவையற்ற நேரங்களில் Antibiotics எடுத்துக்கொள்வதால், நாளடைவில் இவை Antibiotics-க்கு கட்டுப்படாத, அதனை எதிர்க்கும் பாக்டீரியாக்களை தொடர்ச்சியாக உடலில் உருவாக்கும். இது, நலம் குன்றியர்கள், முதியவர்கள்மீது தாக்கும்போது அவர்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் Antibiotics கொடுத்தாலும் அந்த கிருமி தொற்றை சரி செய்யாது.
எனவே தேவை இல்லாமல் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ள கூடாது. மருத்துவரிடத்தில் சென்றால் உங்களுக்கு உண்டான தொற்று, வைரஸால் உருவானதா அல்லது பாக்டீரியாவால் உண்டானதா என்பதை சோதித்து அதற்கேற்றார் போல அவர் மருந்துகளை வழங்குவர்.
முக்கியமாக பாக்டீரியா தொற்றாக இருந்தால் மட்டும் Antibiotics கொடுக்கப்படும். வைரஸ்க்கு கொடுக்கப்பட மாட்டாது. இதனால்தான் மருத்துவ ஆலோசனை அவசியம் என்கிறோம்.
பாராசிட்டம்மால் என்பது Antipyretic. Antipyretic என்பது காய்ச்சலுக்காக, உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்து. இவற்றை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பாராசிட்டம்மால் என்பது நல்லதுதான். இருப்பினும், அதிகளவு dose ஆக எடுத்துக்கொண்டாலோ, தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டாலோ கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பதில்: மருந்தகங்களில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் Antibiotics கொடுக்கப்படக்கூடாது. அதேசமயம் மருத்துவர்களும் வைரஸ் தொற்றுகளுக்கு Antibiotics கொடுப்பதை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
முக்கியமாக மருத்துவரிம் சென்று பரிசோதனை செய்த பின்பே மக்கள் எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே அதன் நுகர்வை பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும்” என்று தெரிவித்துள்ளார்.