ஹெல்த்

அதிக தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? அலெர்ட்!

Sinekadhara

உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு தண்ணீர் இன்றியமையாதது. போதுமான தண்ணீர் குடிப்பது உடலுக்கு எவ்வளவு அவசியமோ அதேபோல், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதாலும் சில விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் என்னவாகும்?

அதிக தண்ணீர் குடிப்பது உடலிலுள்ள சோடியம் போன்ற எலக்ட்ரோலைட் அளவின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி, ரத்தத்திலிருந்து நீர்த்துப்போக செய்கிறது.

சோடியம் உடலில் உள்ள நீரின் அளவை சமநிலைப்படுத்துவதோடு, தசைகளின் சுருக்கம் மற்றும் தளர்வு மற்றும் நரம்பு தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துவதால், இந்த பற்றாக்குறை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஹைபோநெட்ரீமியா எனப்படும் நிலையை ஏற்படுத்தும்.

ஹைபோநெட்ரீமியா (Hyponatremia)

ஹைபோநெட்ரீமியா என்பது உடலிலுள்ள இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைந்து ரத்தம் நீர்த்துப்போகக்கூடிய அபாயகரமான ஒரு நிலை. இது ரத்த செல்களை வீக்கமடையச் செய்து உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும். ரத்த செல்கள் வீக்கமடையும்போது முதலில் மூளையில்தான் பிரச்னை உருவாகும்.

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்

குமட்டல்
மயக்கம்
தலைவலி
குழப்பம்
தசை வீக்கமடைதல் அல்லது தசைபிடிப்பு

குறைவாக தண்ணீர் குடிப்பது என்ன மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்துமோ அதேபோல் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடிப்பதும் பிரச்னைதான். எனவே அளவோடு தண்ணீர் குடிப்பது அவசியம்.