பேராசிரியர் ராஜ்மோகன் pt web
ஹெல்த்

Covishield தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சொல்வதென்ன?

பேராசிரியர் ராஜ்மோகன் கூறுகையில், “மூன்று வருடத்திற்கு முன்பே அந்த தடுப்பூசி நிறுவனம், தங்கள் தடுப்பூசி மிக அரிதான பக்கவிளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். மக்கள் இதற்காக அச்சப்படத் தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.

PT WEB

கொரானா காலகட்டத்தில் போடப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பற்றிய குழப்பமும் அச்சமும் தற்போது பொதுமக்களிடத்தில் மிகுந்துள்ளது. காரணம், தங்கள் தடுப்பூசியால் மிக அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என அந்நிறுவனம் சமீபத்தில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ பேராசிரியரோடு, புதிய தலைமுறை சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அப்போது பேசிய பேராசிரியர் ராஜ்மோகன், “மூன்று வருடத்திற்கு முன்பே அந்த தடுப்பூசி நிறுவனம், தங்கள் தடுப்பூசி மிக அரிதான பக்கவிளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். மக்கள் இதற்காக அச்சப்படத் தேவையில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்தவற்றை, கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.