ஹெல்த்

இல்லற உறவின் நன்மைகளும் ஆரோக்கிய நலனும்!

JananiGovindhan

துணையுடன் உடலுறவு கொள்வது மன ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதோடு ஆயுளையும் கூட்டுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பல தரப்பட்ட ஆய்வுகளின் கூற்றுப்படி, வழக்கமாக உடலுறவில் ஈடுபடுபவர்களின் ரிலேஷன்ஷிப் உறுதியானதாக இருப்பதோடு, அந்த இணையர்கள் மன அழுத்தம், பதற்றம் மற்றும் இதய கோளாறுகளிலில் இருந்தும் விடுபடுகிறார்கள் என்றும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, தொடர்ச்சியாக இல்லறத்தில் ஈடுபடுவோருக்கு பல விதமான உடல் மற்றும் மன ரீதியான நலன்கள் உண்டாவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவை என்னவென காணலாம்:

நோயெதிர்ப்பு சக்தி:

தொடர்ச்சியாக உடலுறவு கொள்வதன் மூலம் உடல் நல்ல ஆரோக்கியத்தோடு வைத்திருக்கச் செய்கிறது. மேலும் வெப்பநிலை மாறும் சமயத்தில் ஏற்படும் உடல் உபாதைகள், முறையாக தொடர்ந்து உடலுறவு கொள்வதன் மூலம் கிடைக்கும் நோயெதிர்ப்பு சக்தியால் தவிர்க்கப்படுகிறது.

கலோரிகளை எதிர்க்க உதவும்:

உடலுறவு கொள்வதே ஒரு வகையான உடற்பயிற்சியாகத்தான் கருதப்படுகிறது. இதனால் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்துடிப்பை சீராக்குகிறது. இருப்பினும் அதிகளவிலான கலோரிகளை குறைக்காவிட்டாலும் உடலின் அமைப்பை சீராக வைத்திருக்க இது உதவும்.

இதய கோளாறுகளை குறைக்கும்:

உங்கள் பார்ட்னருடன் நீடித்த நிலையான உடல் உறவை கொள்பவராக இருந்தால் உங்களுடைய இதய நலனுக்கு எந்த தீங்கும் நேராது. நீண்ட ஆயுளை கொடுக்க உடலுறவும் உதவுகிறது.

தலைவலியை நீக்கும்:

இல்லறத்தில் ஈடுபடும் போது ஆக்சிடொசின் என்ற ஹார்மோன் வெளியிடப்படுவதால் உடலில் உள்ள வலிகளுக்கு தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக தீராத தலைவலி இருப்பவர்கள் உங்கள் இணையருடன் உறவு கொண்டால் அவை நீங்குவதை உணரலாம்.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது:

ஆச்கிடொசின் ஹார்மோன் வெளியேறும் போது நரம்புகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோலை எதிர்த்துப் போராடச் செய்கிறது. மன அழுத்தமில்லாத உடலுக்கு வழி வகுப்பதோடு இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் நரம்புகளை அமைதிப்படுத்தி நன்றாக தூங்கச் செய்கிறது.

மன நிலையை சீராக்கும்:

உடலுறவால் மனநிலையை உயர்த்தவும், ஒரு நபரை உளவியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறுதிப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான இல்லறவ வாழ்க்கை ஒரு உறவில் திடத்தன்மையைக் கொண்டு வருகிறது, இதனால் மன நிலை அமைதியாகிறது.

மார்பக புற்றுநோயை தடுக்கும்:

உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரகப்பையை கட்டுப்படுத்தும்:

தொடர்ச்சியான உடலுறுவால், சிறுநீர்ப்பை தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. அப்போது சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தவும் முடியும் என கூறப்படுகிறது.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் இல்லற வாழ்வில் இருக்கும் இணையர்களுக்கான பொதுவாக குறிப்புகளே. இருப்பினும், காதலனோ, காதலியோ, கணவனோ மனைவியோ உங்களுடைய இணையருடன் உறவுகொள்ளும் அவர்களுக்கு அதில் விருப்பம் இருக்கிறதா இல்லையா, அவர்கள் என்ன மாதிரியான மன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து தெளிந்து ஈடுபடுவதும் முக்கியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.