ஹெல்த்

DESK-லே வேலை செய்பவருக்கு கொலஸ்ட்ரால் வராமல் இருக்க உதவும் வழிகள்!

DESK-லே வேலை செய்பவருக்கு கொலஸ்ட்ரால் வராமல் இருக்க உதவும் வழிகள்!

JananiGovindhan

இதயத்தின் ஆரோக்கியத்தையும், கொலஸ்ட்ரால் அளவை முறையாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உடல்நலனுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உடலில் அதிக அடர்த்தி கொழுப்பு அல்லது நல்ல கொழுப்பு மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு என இரண்டு வகை கொலஸ்ட்ரால் உள்ளது.

இதில், HDL ( high-density cholesterol) உடலுக்கு ஆரோக்கியமானது, ஏனெனில் இது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற கல்லீரலுக்கு உதவுகிறது. அதேசமயம், LDL (low-density cholesterol) இரத்த நாளங்களில் குவிந்து அடைப்புகளை ஏற்படுத்தும்.

இது மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே, கொலஸ்ட்ரால் அளவை முறையாக கட்டுப்படுத்தி வருவதன் மூலம் பெரிய அளவிலான உடல்நல பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறைதான் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு பெரிய பங்களிப்பாக உள்ளது. ஆகையால், ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது அதி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி, அதிக கொலஸ்ட்ரால் அளவுக்கான காரணிகள் என்ன என்பதை காணலாம்:

1) அதிக சர்க்கரை எடுத்துக்கொள்ளுதல்:

உணவுப்பண்டமோ, கூல்ட்ரிங்ஸ் போன்ற பானங்களோ இந்த இரண்டிலுமே சர்க்கரை இருக்கலாம். அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது அதிக கொலஸ்ட்ராலுக்கு வழிவகுக்கும். எனவே, அதைத் தவிர்ப்பது அவசியம். இருப்பினும், செயற்கையான சர்க்கரைகளுக்கு மாற்றாக இயற்கையான சர்க்கரையை சேர்க்கலாம்.

2) டெஸ்க் வேலை:

அலுவலகத்தில் எப்போதும் ஒரே இடத்திலேயே உட்கார்ந்து கம்ப்யூட்டரை உற்று பார்த்தப்படி வேலை செய்தாலோ, ஒரே இடத்தில் இருந்தபடியே டிவி பார்ப்பது போன்றவற்றை செய்வதால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கச் செய்யும். இது ஆபத்தை கொடுக்க நேரிடும். இதனை தவிர்க்க தினந்தோறும் முறையாக உடற்பயிற்சி செய்வது அவசியம்.

3) மதுக்குடித்தல், புகைப்பிடித்தல்:

இந்த இரண்டு பழக்கமும் குறைந்த அடர்த்திக் கொண்ட கொழுப்புக்கு முக்கிய பங்காற்றுகின்றன. அதிகளவு ஆல்கஹாலும், தொடர்ந்து புகைப்பிடிப்பதாலும், உடலின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும்.

4) போதிய தூக்கமின்மை:

போதுமான மணிநேரம் தூங்கவில்லை என்றால், அது உங்கள் உடலின் செயல்பாட்டையும், கொலஸ்ட்ரால் அளவையும் பாதிக்கச் செய்யும். போதிய தூக்கமின்மை மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது மீண்டும் கொலஸ்ட்ரால் அதிகரிக்க வழிவகுக்கும்.

ஆகவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனைகளோடு ஆரோக்கியத்தை பராமரித்து நோயில்லா வாழ்வை நோக்கி பயணப்படுங்கள்.