ஹெல்த்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ... என்னென்ன சாப்பிடலாம்..?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ... என்னென்ன சாப்பிடலாம்..?

Sinekadhara

நாம் தினமும் சாப்பிடும் உணவுதான் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிசெய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் சில வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை பரிந்துரைந்துள்ளது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு
இதில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. இதில் அதிக ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உடல் பருமன், அதிக கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் பீட்டா கரோட்டின் அதிகம்.

பப்பாளி
பப்பாளியில் பொட்டாசியம் மற்றும் நிறைய ஆன்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. இதுதவிர வைட்டமின் ஏ மற்றும் சி சத்தும் அதிகம். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்னையை உருவாக்கும் நச்சுகளை அழித்து, குடல் இயக்கத்தை இலகுவாக்கும். வயிறு வீக்கம் மற்றும் மலச்சிக்கல் கோளாறுகளை சரிசெய்யும்.

தக்காளி
வைட்டமின்கள்  நிறைந்தது தக்காளி. குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தக்காளியில் வைட்டமின் சி, கே, இரும்பு, ஃபோலேட் , பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

கேரட்
இதில் நார்ச்சத்து அதிகமுள்ளது. மேலும் செரிமான மண்டலத்தை வலுவாக்குகிறது. மலச்சிக்கலை தடுக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இதய பாதுகாப்புக்குத் தேவையான லைகோபீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.

பச்சை காய்கறிகள், கீரைகள்
இவற்றில் வைட்டமின் சி, பி6, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் ரத்த அழுத்த அளவை பராமரித்து கண் பார்வையையும் மேம்படுத்துகிறது.

மாம்பழம்
இதில் வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமான சக்தியை அதிகரித்து ரத்தத்தில் லிப்பிட் அளவை சீராக்கும். தவிர நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்களுடன் போராடத் தேவையான பயோ ஆக்டிவ் கலவையான மாங்கிஃபெரினை தன்னுள் வைத்திருக்கிறது.