மாரடைப்பு PT
ஹெல்த்

மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க எளியவழி கண்டுபிடிப்பு! ஆய்வறிக்கை வெளியிட்ட சிட்னி பல்கலைக்கழகம்!

மாரடைப்பு, இளம் வயது உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இதை எளிதாக தடுக்கலாம் என ஆய்வுபூர்வமாக நிரூபித்துள்ளனர் விஞ்ஞானிகள். அது என்ன வழிமுறைகள் என்பதை இப்போது பார்க்கலாம்.

webteam

படிகளில் ஏறி இறங்குதல், வீடு பெருக்குவதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நடந்து செல்லுதல் போன்ற வழக்கமான அன்றாட பணிகளை சற்று வேகமாகவும் அதிக முறையும் செய்தாலே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கான வாய்ப்புகள் வெகுவாக குறைவதாக சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

25000 நடுத்தர வயதினரிடம் 8 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் அறிக்கைகளை சுட்டிக்காட்டி லான்செட் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஆய்வில் வெளியான முக்கியமான தகவல்!

42 முதல் 78 வயது வரையுள்ளவர்களின் அன்றாட பணிகளை கண்காணித்து இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் இயல்பான உடல் உழைப்பை மட்டும் மேற்கொண்டவர்கள் என்றும் உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற பிறவற்றில் ஈடுபாடு காட்டாதவர்கள் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு

இவர்களின் கைகளில் உடல் கூறுகளை கண்காணிக்கும் மின்னணு உணர்வு சாதனங்களை அணிவித்து மருத்துவ அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் மிக நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது தெரியவந்துள்ளதாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த உடல் உழைப்புகள் குறைந்த நேரத்திலானதாக இருந்தாலும் கூட தீவிரமானதாக இருப்பது அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சாதாரண வேலைக்கு கூட இயந்திரங்களை நாடுவது வேண்டாம்!

உடற்பயிற்சியகத்திற்கு செல்ல நேரம் வேண்டுமே...அதற்காக ஒரு தொகை செலவு செய்ய வேண்டுமே என தயங்குபவர்களுக்கு இந்த ஆய்வுத்தகவல் தேன் போல் இனிக்கும் செய்தி.

மாரடைப்பு