child pt
ஹெல்த்

“இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இலவசம்” - தமிழக அரசு

PT WEB

செய்தியாளர் - பால வெற்றிவேல்

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், “பிறந்த குழந்தைக்கு முதல் மாதத்தில் இருந்து 18 வயது வரை 16 தவணைகளாக தமிழக அரசால் இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை, இனி தாய்மார்கள் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக பெறலாம். அப்படியொரு புதிய திட்டத்தை விரைவில் தமிழக அரசு அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் சில தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளின் விலையை கூடுதலாக வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, “குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதுகுறித்தான அரசாணை விரைவில் வெளியிடப்படும். விரைவில் இந்த திட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொடங்கி வைக்கப்பட உள்ளது” என பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்