தாய்ப்பால் puthiya thalaimurai
ஹெல்த்

உலக தாய்ப்பால் வாரம்|'தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யவேண்டியவை' முதல் 'Formula Milk ஆலோசனைகள்'வரை

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும், ஃபார்முலா பால் கொடுப்பது சரியா என்பது பற்றியெல்லாம் நமக்கு விளக்கம் அளிக்கிறார் பாலூட்டுதல் நிபுணர் (IBCLC) டீனா அபிஷேக்.

ஜெ.நிவேதா

தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் வண்ணம் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1- 7 வரை ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும், ஃபார்முலா பால் கொடுப்பது சரியா என்பது பற்றியெல்லாம் நமக்கு விளக்கம் அளிக்கிறார் பாலூட்டுதல் நிபுணர் (IBCLC) டீனா அபிஷேக்.

பாலூட்டுதல் நிபுணர் (IBCLC) டீனா அபிஷேக்.

அதை அறியலாம்...

தாய்க்கு சரியாக பால் சுரக்கவில்லை என்றால் குழந்தைக்கு வேறு பால் (Formula Milk) கொடுக்கலாமா?

“தாய்க்கு பால் போதுமான அளவு சுரக்காத போது, குழந்தைக்கு ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அப்படியான குழந்தைகளை மருத்துவம் பல வகைகளிலும் காக்கும் என்றாலும்கூட, தாய்க்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கே மருத்துவர்கள் முன்னுரிமை அளிப்பர். அதையே நானும் சொல்ல விளைகிறேன்...

தாய்ப்பால்

தாய்ப்பால் அதிகரிக்கும் முயற்சிகள்:

  1. தொடர்ந்து பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு, இயல்பாகவே பால் சுரப்பு அதிகரிக்கும்.

  2. மார்பகங்களை அடிக்கடி காலி செய்வது அவசியம். பம்ப் அல்லது கையில் அழுத்தி பாலை வெளியேற்றுவதை செய்யலாம். வெளியேறும் பாலை குழந்தை முழுமையாக குடிக்கவில்லை எனில், அதை தாய்ப்பால் வங்கிகள் மூலம் தானமாக வழங்கி அம்மாக்கள் பிற குழந்தைகளுக்கு உதவ வேண்டும். அதைவிடுத்து, அப்படியே பால் மார்பில் சேர்ந்திருக்க விட்டால், அது கட்டி வலியை உண்டாக்கும். மேற்கொண்டு பால் சுரப்பும் தடைபடும்.

  3. பராமரிப்பு: அம்மாக்கள் முழுமையான ஓய்வில், மனஅழுத்தம் குறைந்த சூழலில் இருந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

இவை அனைத்திற்கும் பிறகும்கூட தாய்ப்பால் போதிய அளவு சுரக்கவில்லை என்றால், தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெறுவது, சிறந்த தீர்வாக இருக்கும்.

மேற்கண்ட முறைகள் சாத்தியமில்லாத போது Formula பால் கொடுக்கலாம்.

ஆனால் அனைத்து வழிகளையும் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ள வேண்டும். தாய்ப்பால் சுரப்பு குறைந்தால், உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

தாய்ப்பால்

குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப்பின் Formula Milk மற்றும் தாய்ப்பால்... இரண்டையும் கலந்து சில அம்மாக்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கின்றனர். இது சரியா?

குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் கொடுக்கப்படவேண்டும். இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். ஆறு மாதங்களுக்குப்பிறகு, குழந்தைக்கு மெல்லிய பழச்சாறு, காய்கறி போன்ற Complimentary உணவுகள் கொடுக்கலாம்.

Formula Milk குழந்தைக்கு கொடுப்பதற்கு அளவுகோல் ஏதும் உள்ளதா? அல்லது கொடுக்கவே கூடாதா?

6 மாதங்களுக்குப் பின்னர், தாய்ப்பால் கொடுக்கும் முன்பாக அல்லது பிறகு, Formula Milk கொடுக்கலாம். ஒரேசமயத்தில் இரண்டையும் கலந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. Formula Milk கொடுக்கும்போது, அதன் பொதி மீதுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சரியான அளவு தண்ணீர் மற்றும் Formula Milk கலந்து கொடுக்க வேண்டும்.

Formula Milk

Formula Milk கொடுப்பதற்கு முன், மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். அவர்களின் வழிகாட்டுதல் முக்கியம். குழந்தையின் உடல் எடை மற்றும் பசிக்கு ஏற்ப அளவுகள் மாறலாம். குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை முன்னிட்டுக் கொண்டு எந்த வித மாற்றங்களையும் மருத்துவரின் ஆலோசனையுடன் செய்வது நல்லது. முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் கொடுத்தல் மற்றும் அதன் பிறகு அடிக்கடி தாய்ப்பால் கொடுத்தல் அவசியம்.