ஹெல்த்

மூச்சுவிட சிரமமா? - இந்த டிப்ஸ் உங்கள் நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்!!

Sinekadhara

உடலின் மற்ற உறுப்புகளைப் போன்றே நுரையீரலையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் உடல் முழுதும் ஆக்சிஜன் கடத்தப்படுவதில் சிக்கல் ஏற்படும். நுரையீரல் சரிவர செயல்படாவிட்டால் பிற உடல்நல பிரச்னைகள் கட்டாயம் ஏற்படும். எனவே எப்போதும் நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம்.

புகைப்பிடித்தல் கூடாது

நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருக்க புகைபிடித்தல் கூடாது என்ற வாக்கியத்தை காலம்காலமாக கேட்டுவந்தாலும் நாளுக்கு நாள் புகைபிடிக்கும் பழக்கமானது இளைஞர்களிடையே அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இது நீங்கள் உங்கள் நுரையீரலுக்கு செய்யக்கூடிய மிக மோசமான செயல். புகையானது காற்றுப்பைகளை ஒடுக்கி மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கிறது. மேலும் புகைப்பிடித்தல் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

தொடர் உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினசரி உடற்பயிற்சி செய்வது நுரையீரல் ஆக்சிஜனை நன்றாக உள்ளிழுத்து உடல் திசுக்களுக்கு கடத்த உதவும்.

மூச்சுப்பயிற்சிகள்

மூச்சுப்பயிற்சிகளை பழக்கப்படுத்தும்போது, ஆழ்ந்து மூச்சுவிடுவது அவசியம். இது நுரையீரல் திறனை மேம்படுத்தவும், நுரையீரலை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

தொற்றுக்களை தவிருங்கள்

தொற்றுநோய்களால் பாதிக்கப்படும்போது முதலில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் நுரையீரலாகத்தான் இருக்கும். இது உறுப்பு பலவீனமடைய வழிவகுக்கும். எனவே தொற்றுக்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம். அப்படி தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

மாசுபட்ட காற்று

நுரையீரலை பலவீனமடையச் செய்யும் மற்றொன்று மாசுபட்ட காற்று. இது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாஸ்க் அணிவது சிறந்தது. மேலும் காற்று சுத்திகரிப்பான்களையும் பயன்படுத்தலாம்.