ஹெல்த்

அஜீரண பிரச்னையா? இந்த டெக்னிக்ஸ் கண்டிப்பாக கைகொடுக்கும்

அஜீரண பிரச்னையா? இந்த டெக்னிக்ஸ் கண்டிப்பாக கைகொடுக்கும்

Sinekadhara

அஜீரணம் அல்லது செரிமான பிரச்னை என்பது மலச்சிக்கலாகவோ அல்லது வாயுத்தொல்லையாகவோ அல்லது வயிற்றுப்பொருமலாகவோ இருக்கலாம். அளவுக்கதிகமாக உணவு எடுத்துக்கொள்வதாலோ, மருந்துகளாலோ இந்த பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு அல்சர், புகைப்பிடித்தல் மற்றும் மாதவிடாய் காலங்களில் அஜீரணக்கோளாறு ஏற்படுகிறது. இதற்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வுகாணலாம்.

ஓமம்: வீட்டிலேயே மாவு பிசைந்து சமைக்கும் உணவுகளில் பெண்கள் பெரும்பாலும் ஓமம் சேர்ப்பதுண்டு. தனிச் சுவையுடைய இந்த மூலிகை வாயுத்தொல்லை, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றில் அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கிறது. சிலர் இதனை அப்படியே சாப்பிடுவர். சிலர் ப்ளாக் சால்ட்டுடன் சேர்த்து சாப்பிடுவர்.

பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகத்தை சோம்பு என்றும் கூறுகின்றனர். இதனை சூடுதண்ணீரில் சேர்த்து டீயாக குடிப்பது சிறந்த தீர்வைக் கொடுக்கும். இதிலுள்ள ஃபென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் போன்றவை குடல்பாதையிலிருந்து வாயுவை வெளியேற்றும்.

சுடுதண்ணீர்: மூலிகைகளின் சுவையை விரும்பாதவர்கள் வெறுமனே சுடுதண்ணீரை மட்டும் அருந்துவர். சுடுதண்ணீரில் சிறிது தேன் அல்லது எலுமிச்சைச் சாறு அல்லது ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அருந்தலாம்.

பேக்கிங் சோடா: வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதை உணர்ந்தால் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அல்சர் போன்ற பிரச்னை இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

எலுமிச்சைச் சாறு மற்றும் ப்ளாக் சால்ட்: வயிற்றில் வாயு அதிகரித்து வயிறு பெரிதாவதைப்போல் உணர்ந்தால் எலுமிச்சைச் சாறுடன் சிறிது ப்ளாக் சால்ட்டை கலந்து சில துளிகள் குடிக்கவேண்டும். இது வயிற்றின் அசௌகர்யத்தை குறைக்கும்.