ஹெல்த்

குடல் ஆரோக்கியம் முக்கியம் பாஸ்! இந்த பழக்கங்கள் உங்கள் வயிற்றை பாழாக்கலாம்!

குடல் ஆரோக்கியம் முக்கியம் பாஸ்! இந்த பழக்கங்கள் உங்கள் வயிற்றை பாழாக்கலாம்!

Sinekadhara

வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் வயிறு ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அது மொத்த ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். உங்களுடைய உணவு முறை மற்றும் வாழ்க்கைமுறை கட்டாயம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

குறிப்பிட்ட சில பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல் சில சீரற்ற உணவு மற்றும் வாழ்க்கைமுறை குடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். ஆரம்பத்தில் பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தென்படாது; அதேசமயம் சில அறிகுறிகள் வந்தபின்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மோசமான வயிற்று பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

சில பொதுவான பழக்கங்கள் வயிற்று பிரச்னைக்கு காரணமாக அமையும்.

1. தூக்கம்: போதிய தூக்கமின்மை மிக மோசமான குடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நன்றாக தூங்காவிட்டால் உடல் அதீத அழுத்தத்திற்கு உள்ளாகும். இது குடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே போதுமான தூக்கம் மிகமிக அவசியம்.

2. மன அழுத்தம்: குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றொரு காரணி இது. அதீத மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை குறைக்கிறது. இதனால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

3. உடற்பயிற்சி: உடலும் குடலும் நன்றாக இயங்க போதிய உடலுழைப்பு மிகமிக அவசியம். எனவே தினசரி சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வயிற்றுக்கும் நல்லது. வயிற்று பிரச்னைகளை தூரம் வைக்க, தினசரி முறையான உடற்பயிற்சி தேவை.

4. ஆல்கஹால்: அதீத ஆல்கஹால் உடல்நலத்திற்கு கேடு என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். வயிறுக்கு மட்டும் அது நன்மை பயக்கும் என நினைக்கமுடியாது. உடலில் மற்ற பகுதிகளில் எப்படி பிரச்னையை உருவாக்குமோ அதேபோலத்தான் வயிற்றுக்கும். எனவே ஆல்கஹால் அருந்தும்போது எந்த அளவுக்கு அருந்துகிறோம் என்பதில் மிகமிக கவனம் தேவை.