ஹெல்த்

ஜிலுஜிலு தண்ணீரில் குளிக்க விரும்புவரா? - நீங்கள் பருமனாகும் வாய்ப்பு குறைவு

ஜிலுஜிலு தண்ணீரில் குளிக்க விரும்புவரா? - நீங்கள் பருமனாகும் வாய்ப்பு குறைவு

Sinekadhara

குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு.

இந்தியாவை பொருத்தவரை குளிர்ந்த தண்ணீரில்தான் குளிக்கவேண்டும் என்பதை பல வீடுகளில் வழக்கமாகவே கொண்டுள்ளனர். குறிப்பாக வெயில்காலங்களில் வெப்பநிலை 48 டிகிரிக்கும் அதிகமாகும்போது சூடான தண்ணீரில் குளிக்க நாமே விரும்ப மாட்டோம். அதிலும் கொளுத்தும் வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது உடலின் வெப்பநிலையை தணிக்க குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதைவிட சிறந்தவழி இருக்கமுடியாது. உடலின் வெப்பத்தை தணிப்பதை விட குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதால் வேறு சிறந்த பலன்களும் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?

உடற்பருமனால் அவதிப்படுபவர்கள் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதால் எடை குறையும் என்கிறது ஒரு புதிய ஆய்வு. உடற்பருமன் பிரச்னை உள்ளவர்கள் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது அவர்களின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, கலோரி எரிக்கும் செயலை வேகப்படுத்துகிறது. இது எடை குறைப்பை தூண்டுகிறது. மேலும் குளிர்ந்த தண்ணீரில் குளிர்ப்பதால் உடலில் குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

எலிகளை வைத்து நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் குளிர்ந்த வெப்பநிலை எலிகளின் எடையை குறைந்திருப்பதாக Nature Metabolism இதழில் வெளியான ஆய்வுகட்டுரைக் கூறுகிறது. வீக்கத்தின்மீது குளிர் பரவும்போது அது எப்படி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடற்பருமனை குறைக்கிறது என்பதும் இந்த ஆய்வுக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.