சருமம் மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் முகநூல்
ஹெல்த்

கொளுத்தும் வெயில்! சருமம், நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் என்ன வரும்.. எப்படி தற்காத்து கொள்ளலாம்?

ஜெனிட்டா ரோஸ்லின்

குத்தும்.. எரியும் வெயில் காலம் வந்ததே!.... கோடை காலம் என்றாலே கொளுத்தும் வெயிலின் காலம் மட்டும் அல்ல. புது புது நோய்களுக்கான காலமும் கூட. இந்தவகையில்,சருமம் மற்றும் நரம்பியல் தொடர்பாக ஏற்படும் கோடை கால பிரச்னைகள் என்ன? அவை ஏற்படாமல் எவ்வாறு தடுக்கலாம் என மருத்துவர்கள் ஆலோசனையுடன் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

வெயில்காலத்தில்  சருமத்தை பாதுகாப்பது எப்படி?

சருமநோய் நிபுணர் டாக்டர் தினேஷ்:

சருமநோய் நிபுணர் டாக்டர் தினேஷ்:
  • வியர்க்குரு அதிக அளவு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

  • கிருமியினால் ஏற்படும் சரும பிரச்னைகளும் உள்ளது.

  • வைரசால் வரும் அக்கி, அம்மை நோய்களும் வாய்ப்பு உள்ளது.

  • பூஞ்சை நோய்களும் வர வாய்ப்பு உள்ளது. உதரணமாக படர்தாமரை, வெள்ளை படுதல்,தேமல் போன்றவை.

  • வெயிலின் காரணமாக தோல் கருப்பாக மாறவாய்ப்புள்ளது. இதனை sun burn என்று குறிப்பிடுவோம். மேலும், தீக்காயங்கள் போல சருமத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தற்காப்பது எப்படி?

  • அதிகளவு வெயிலில் சுற்றுவதை தடுக்க வேண்டும்.

  • இருவேளை குளிக்க வேண்டும்.

  • கதர் ஆடைகளை அணிய வேண்டும் .

  • தண்ணீரை அருந்த வேண்டும்.

  • வெளியில் செல்லும் போது குடைகளை எடுத்து செல்லலாம்.

  • spf 50 வரும் தரமான சன்ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம்.

சுடெரிக்கும் வெயிலில் நரம்பு தொடர்பான பிரச்னைகளை கையாளுவது எப்படி?

நரம்பியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் அருண் ராஜ்

  • வெயிலின் தாக்கத்தால் தலைவலி,காய்ச்சல் அதிகமாக ஏற்படும்.

  • 104, 05 டிகிரி அளவுக்கு காய்ச்சல் அதிகரிக்கும்.

  • வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை heat stroke என்று குறிப்பிடுவர். ஆகவே, heat stroke வருவதற்கான வய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், தோல் சிவந்து காணப்படும், பேச்சு குளறும், இன்னும் உடல் நிலை பலவீனமடைய அடைய உடலில் உள்ள தாது உப்புகளின் அளவு குறைந்து வலிப்பு வரும், அதையும் தண்டி கோமாவுக்கு செல்ல கூடிய அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

தற்காப்பது எப்படி?

  • 11- 3 மணியிலான வெயிலில் வெளியே போவதை தவிர்க்கலாம்.

  • பருத்தி ஆடைகளை அணியலாம். நிறைய தண்ணீர் பருக வேண்டும்.

  • வெறும் தண்ணீரை விட சர்க்கரை, உப்பு கலந்த கரைசலை குடிக்கலாம்.

  • இளநீர், பழரசங்களை அருந்துவதன் மூலம் வெப்பத்தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.