கோடை வெயில் முகநூல்
ஹெல்த்

வெளுத்து வாங்குதா வெயில்? குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கலாம்..எதையெல்லாம் கொடுக்க வேண்டாம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

கோடை வெயில் அதிகரித்து வரும் சூழலில் , குழந்தைகளுக்கு எவ்வகையான உணவுகளை கொடுக்கலாம்? எவ்வித உணவுகளை தவிர்க்கலாம் என்று விளக்குகிறார் குழந்தை நல ஊட்டசத்து நிபுணர் மருத்துவர் லேகா ஸ்ரீதரன்.

குழந்தை நல ஊட்டசத்து நிபுணர் மருத்துவர் லேகா.

எதை உண்ணலாம்

  • கோடைக்காலம் வந்தாலே முதலில் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது ஹைட்ரேஷன். உடலில் நீர்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  • குறிப்பாக, குழந்தைகள் வெயில் காலங்களில் வீட்டில் இருக்கும் போது ஏசியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால், அவர்களுக்கு தாகம் எடுப்பது குறைவாகவே உள்ளது. எனவே குழந்தைகளுக்கு தாகம் எடுக்கிறதோ இல்லையோ. அவர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறார்களா? என்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். ஆகவே தண்ணீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று

  • தண்ணீரை தவிர வேறு எந்தவகையில், திரவத்தை எடுத்து கொள்ளலாம் என்றால், இளநீர், மோர், லெஸ்ஸி, லெமன் ஜீஸ், சூப் போன்று எடுத்து கொள்ளலாம்.

  • இதை தவிர, உணவில் நீர்சத்து நிரம்பிய காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ளலாம். உதாரணமாக, தர்பூசணி ஆரஞ்ச், பைன் ஆப்பிள், வெள்ளரிக்காய், தக்காளி போன்ற சத்தான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

  • குழந்தைகளுக்கு அடுத்த முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது புரோட்டீன். புரோட்டீன் என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஆகவே,குழந்தைகளுக்கு உணவில் போதுமான அளவு புரோட்டீன் சென்று சேர்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • புரோட்டீன் சத்துக்களை பால் பொருட்களின் மூலம் பெற்றுகொள்ளலாம். உதாரணமாக, முட்டை, மீன், நட்ஸ்,யோகட் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

  • மேலும், சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை எடுத்து கொள்வது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் என்ற ஒரு மூட நம்பிக்கை உள்ளது. ஆகவே,தேவையான அளவு அசைவ உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

  • தண்ணீர் பருகும் அளவு என்பது குழந்தைகளுக்கு வயதை பொறுத்து மாறுபடும்.

உதாரணமாக, 10 கிலோ எடை கொண்ட குழந்தைகள் ஒருநாளைக்கு 1000 மி.லிட்டர் நீர் அருந்த வேண்டும்.15 கிலோ எடை கொண்ட குழந்தைகள் 1500 மி.லி என்று தங்களுக்கு தேவையான அளவு நீரை பருக வேண்டும். மேலும், குழந்தைகள் சரியாக சிறுநீர் கழிக்கிறார்களா என்பதையும் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

எதை தவிர்க்க வேண்டும்

  • எதை தவிர்க்க வேண்டும் என்றால் , தினசரி அதிகளவு எண்ணெய்யில் (deep fry) பொரித்த உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவு உணவில் எண்ணெய் சேர்த்து சமைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

  • குளிர்சாதனப்பெட்டில் அதிகளவு ஐஸ்கிரீம்களை பதப்படுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டில் அதிகளவு ஐஸ்கிரீம் இருக்கும்போது குழந்தைகள் அதை அதிகளவு எடுத்து உண்ண நேரிடும். எனவே அவற்றை அடிக்கடி தருவதை தவிர்க்கலாம். எப்போதாவது கொடுப்பதில் தவறொன்றுமில்லை.