சௌமியா சுவாமிநாதன்  WHO
ஹெல்த்

சௌமியா சுவாமிநாதனுக்கு மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட முக்கிய பொறுப்பு!

மத்திய அரசின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கான கொள்கை ஆலோசகராக மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

PT WEB

இந்தியாவில் வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காச நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசகராக, சௌமியா சுவாமிநாதனை மத்திய அரசு நியமித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காசநோய் ஒழிப்பின் ஆராய்ச்சி, உத்திகள் குறித்தான பரிந்துரைகளை சௌமியா சுவாமிநாதன் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌமியா சுவாமிநாதன்

உலக அளவில் திறமைக்கொண்ட நிபுணர் குழுவை உருவாக்கி, அதன்மூலம் இந்தியாவில் காச நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை அவர் முன்னெடுப்பார் எனவும் தெரிவித்துள்ளது. சௌமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.