ஹெல்த்

தும்மல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? - இந்த சிம்பிள் டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

தும்மல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? - இந்த சிம்பிள் டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

Sinekadhara

சளி மற்றும் தூசி போன்றவற்றால் பலருக்கும் தும்மல் வரும். சிலருக்கு காலை எழுந்தவுடனோ அல்லது குளிர்காற்று படும்போதோ, மாலை நேரத்திலோ தும்மல் வரும். பல்வேறு காரணங்களால் தும்மல் வந்தாலும் தொடர்ந்து ஏற்படும்போது அது ஒருவரை கட்டாயம் சோர்வடையச் செய்யும். மேலும் அது மூக்கு ஒழுகுதல், அரிப்பு, கண்களில் நீர் வடிதல், நெரிசல், தலைவலி மற்றும் தீவிர சோர்வு போன்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். ஒவ்வாமை ஏற்படுபவற்றை தவிர்ப்பதன் மூலம் தும்மல் வருவதை தடுக்கலாம். அதேசமயம் சில வீட்டு மருந்துகளும் தும்மலிலிருந்து விடுபட உதவும்.

1. மஞ்சள் பால்: பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது சளிப்பிரச்னைக்கு சிறந்த மருந்து. மஞ்சளில் குர்குமின், அழற்சி எதிர்ப்புப்பொருள், ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கிறது. இதனால்தான் காயங்கள் ஏற்படும்போது அதில் மஞ்சள் வைத்தால் எளிதில் குணமாக்குகிறது. மஞ்சள் கலந்த பாலை குடிப்பது தும்மலிலிருந்து விடுபட உதவும்.

2. இஞ்சிச்சாறு மற்றும் தேன்: உணவில் சுவையைக் கூட்டுவதில் இஞ்சி முக்கியப்பங்கு வகிக்கிறது. இஞ்சியிலும் மஞ்சளைப்போன்றே அழற்சி எதிர்ப்புப் பொருட்கள் நிறைந்திருக்கிறது. அதை தேனுடன் சேர்த்து சாப்பிடும்போது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் மூச்சுத்திணறல் பிரச்னைக்கும் தீர்வு கொடுக்கிறது. லெமன் டீயில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடிக்க தும்மல் மற்றும் சளி பிரச்னைகள் குறையும்.

3. சிட்ரஸ் பழங்கள்: இயற்கைவழியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த வழி சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது. ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய் மற்றும் ஆரஞ்சு போன்றவை சிறந்தது. இந்த உணவுகள் தும்மலை கட்டுப்படுத்துவதுடன், மூச்சுக்குழாய் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்.

4. ஆவிபிடித்தல்: மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆவிபிடித்தல் மற்றொரு சிறந்த தீர்வு. அதீத சளிப் பிரச்னைக்கும் ஆவி பிடித்தல் தீர்வு கொடுக்கும். கொதிக்கும் தண்ணீரில் தைலம் அல்லது நீராவி மாத்திரையை போட்டு தலையை துண்டால் மூடி ஆவிபிடிக்க தும்மல் உள்ளிட்ட அனைத்து சளிப்பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.