ஹெல்த்

நாள்பட்ட ஒவ்வாமை கட்டுப்படுத்த முடியவில்லையா? இந்த சில உணவு முறைகள் உங்களுக்கு உதவும்!

நாள்பட்ட ஒவ்வாமை கட்டுப்படுத்த முடியவில்லையா? இந்த சில உணவு முறைகள் உங்களுக்கு உதவும்!

Sinekadhara

ஒவ்வாமை அல்லது அழற்சி என்பது ஒரு நபரின் நோயெதிர்ப்பு சக்தி மண்டலத்தின் ஏற்படும் மாற்றங்களால் உருவாகக்கூடிய ஒரு பிரச்னை என்று சொல்லலாம். சில உணவுப் பொருட்கள், பூச்சிக்கடி, காற்று மாசு போன்ற பல்வேறு காரணிகளால் ஒவ்வாமை பிரச்னை வரலாம். இதுபோன்ற ஒவ்வாமைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது அவ்வளவு எளிதல்ல. உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்வதன்மூலம், ஒவ்வாமை பிரச்னை வராமல் தடுக்கலாம்.

ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது?

காயம் அல்லது பிற பகுதிகள் வழியாக பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளின் செல்கள் உடலுக்குள் சென்று நீண்ட நாட்கள் தங்கும்போது நாள்பட்ட ஒவ்வாமை ஏற்படலாம். ஆர்த்ரிட்டீஸ் அல்லது மன அழுத்தம் போன்ற பிற காரணிகள் கூட ஒவ்வாமைக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

இயற்கையாவே ஒவ்வாமையை கட்டுப்படுத்துவது எப்படி?

ஒவ்வாமை எதிர்ப்புப் பொருட்கள் நிறைந்த டயட் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் மூலம் நாள்பட்ட ஒவ்வாமையை கட்டுக்குள் கொண்டுவரலாம். இது ஆரோக்கியமாகவும், சீக்கிரத்தில் வயதானது போன்ற தோற்றமடையாமலும் இருக்க உதவும். மேலும் இந்த டயட், இதய நோய்கள், நீரிழிவு, டிமென்ஷியா மற்றும் மூட்டுவலி, கேன்சர் போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

ஒவ்வாமையை குறைக்கும் உணவுகள்

ஒவ்வாமை எதிர்ப்பு டயட்டில் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு போன்ற அனைத்தும் சம அளவில் இருப்பதாக மருத்துவர்கள் எண்ணுகின்றனர். அதேபோல் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து போன்ற அனைத்துமே கிடைக்கும். Mediterranean டயட் என்று சொல்லக்கூடிய டயட் முறையை பின்பற்றுவது ஒவ்வாமையை பெருமளவில் குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கார்போஹைட்ரேட் குறைவான டயட்டுகளும் ஒவ்வாமையை குறைப்பதாகக் கூறுகின்றனர்.

கீழ்க்கண்ட சில உணவுகள் ஒவ்வாமையை குறைக்கும்

  • ப்ரக்கோலி, காலே, முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறி வகைகள்
  • அடர் நிறமுள்ள ப்ளூபெர்ரி, மாதுளை, திராட்சை மற்றும் செர்ரீ போன்ற பழங்கள்
  • அவகேடோ, ஆலீவ் போன்ற அதிக கொழுப்புள்ள பழங்கள்
  • ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகேடோ எண்ணெட் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள்
  • சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் நெத்திலி போன்ற ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த மீன்கள்
  • பாதாம் மற்றும் வால்நட் போன்ற நட்ஸ்
  • குடை மிளகாய் மற்றும் கார மிளகாய்
  • டார்க் சாக்லேட்
  • மஞ்சள், வெந்தயம், லவங்கப்பட்டை போன்ற இயற்கை மூலிகைகள்
  • க்ரீன் டீ
  • குறிப்பிட்ட அளவில் ரெட் வெய்ன்

போன்ற உணவுகள் ஒவ்வாமையை குறைக்கக்கூடியவை. அனைவருக்கும் ஒவ்வாமை என்பது ஒரேமாதிரியாக ஏற்படாது. சிலருக்கு சில உணவுகள் ஒத்துப்போகும், சிலருக்கு அதே உணவை உடல் ஏற்றுக்கொள்ளாது. எனவே எந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பது கவனமாக கண்காணித்து அவற்றை தவிர்த்துவிடுவது பிரச்னையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.