ஹெல்த்

காபி பிரியரா?.. இந்த விளைவுகளை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

காபி பிரியரா?.. இந்த விளைவுகளை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

Sinekadhara

காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் சிலருக்கு நாளே தொடங்காது. இதுபோன்ற நபராக இருந்தால் காபியில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்துவைத்திருப்பது அவசியம். காபி விழிப்பை தூண்டுவதுடன் உடல் சோர்வை போக்கி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கவனம் மற்றும் ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.

அதே சமயம் காபியில் சில தீங்குகளும் உள்ளன.

  • காபியுடன் அதிக சர்க்கரை சேர்த்து குடிக்கும்போது சிலருக்கு உடல் எடையை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
  • அதிகளவு காபி குடிப்பது பதற்றம், அழுத்தம் மற்றும் ஓய்வின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
  • காபி குடிப்பது குறிப்பிட்ட நேரத்திற்கு உடனடி உற்சாகத்தை கொடுத்தாலும், அதன்பிறகு நீண்ட நேரத்திற்கு சோர்வை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாது.
  • மாலை நேரத்தில் காபி குடிப்பது இரவில் தூங்கும் நேரத்தை தள்ளிப்போடும். இது சர்க்காடியன் சுழற்சிக்கு( circadian cycle) இடையூறு விளைவிக்கக்கூடிய இது தவிர்க்கப்பட வேண்டும்.
  • அளவுக்கதிகமாக காபி குடிப்பது ரத்த அழுத்த அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது இதய ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குகிறது.