இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (டிஎஃப்ஆர்) அல்லது ஒரு பெண்ணின் பிறப்பு விகிதம் 2050 ஆம் ஆண்டில் 1.29 ஆக குறையும் என்று லான்செட்டில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
லான்செட் இதழில் வெளியான ஆய்வானது 2100 ஆம் ஆண்டில் உலகளாவிய கருவுறுதல் மற்றும் பிறப்பு முறைகள் குறித்தான தகவல்களை வழங்குவதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2050 ஆம் ஆண்டில் கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண்ணுக்கு 2.1 பிறப்புகளுக்கும் குறைவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 2100 ஆம் ஆண்டில், அனைத்து நாடுகளிலும் 97% மொத்த கருவுறுதல் விகிதம் 2.1 க்கும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சமோவா, சோமாலியா, டோங்கா, நைஜர், சாட் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகள் போன்ற நாடுகள் மட்டுமே 2050 ஆம் ஆண்டினை பொறுத்தவரை இந்த நிலையிலிருந்து விதிவிலக்காக அதிக அளவு கருவுறுதல் விகிதம் என்பது அதிகரித்து காணப்படும்.
மேலும், 2100 ஆம் ஆண்டினை பொறுத்தவரை மாறாக, பூட்டான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் சவுதி அரேபியா போன்ற 13 நாடுகளில் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தைக்கும் குறைவானதாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை பிறப்பு விகிதம் எனபது 2050 ஆம் ஆண்டில் குறைவாக காணப்படும் நாடுகளில் பட்டியலில், south korea,puerto rico, taiwan, serbia,ukraine ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வு, 1950 ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் எனபது 6.18 ஆகவும், 1980 ல் 4.6 ஆகவும். அதுவே, 1.91 ஆகவும் குறைந்துள்ளது என்பதை தெரிவிக்கிறது. இந்த ஆய்வின் கணிப்புகள் உண்மையானதாக இருந்தால் வரும் பத்தாண்டுகளில் இந்தியா கணிசமான மக்கள் தொகை என்பது வீழ்ச்சியை சந்திக்க கூடும்.
இந்த மாற்றம், பாலின சமூக ஏற்றதாழ்வு,தொழிலாளர் பற்றாக்குறை, போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பூனம் இது குறித்து தெரிவிக்கையில், ”நாடுகள் பொருளாதார ரீதியாக வளரும்போது குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் அதிகரிக்கிறது. ஆகவே குழந்தை குறைவாகவே பெற்றெடுப்பதற்கு இது வழிவகுக்கிறது.
மேலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதே காலத்தின் மிக அவரசர தேவை.மேலும், அரசாங்கமும் சமூகமும் பெண்களுக்கான தாய்மைக்கான செலவைக் கணிசமாகக் குறைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.