model image x page
ஹெல்த்

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை: தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் நிறுவனம்!

Prakash J

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மையால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துள்ளன. ஆப்பிரிக்கா நாட்டில் குரங்கம்மையில் புதுவடிவிலான இந்த வைரஸானது, மிகவேகமாக பரவிவரும் நிலையில், காங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா அண்டை நாடுகளுக்கும் பாதிப்பானது பரவியுள்ளது. சமீபத்தில் இந்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து முதலில் ஸ்வீடனுக்கும், பின்னர் பாகிஸ்தானுக்கும் இப்போது பிலிப்பைன்ஸுக்கும் பரவியுள்ளது.

இதுவரை, ஸ்வீடனில் ஒருவருக்கும், பாகிஸ்தானில் 4 பேருக்கும், பிலிப்பைன்ஸில் 1 நபருக்கும் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் குரங்கு அம்மை பரவல் இல்லை என்றாலும், இந்திய அரசாங்கம் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதையும் படிக்க: ஐசிசி தலைவராகும் ஜெய் ஷா? ஆதரவு தெரிவிக்கும் நாடுகள்!

அதேநேரத்தில் இதனை, ‘உலக சுகாதார அவசர நிலையாக’ உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "இது நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று. ஆப்பிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் இது பரவுவதற்கான சாத்தியம் மிகவும் கவலைக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனம், குரங்கம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா கூறுகையில், "குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி உள்ளது. நாட்டு மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் முயற்சியில் எங்களது நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துக்காட்டிய தலைமை நீதிபதி!