Blood group freepik
ஹெல்த்

BLOOD க்ரூப்பில் இப்படியொரு வகை இருக்கிறதா? அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ...!

PT WEB

செய்தியாளர்கள்: மணிகண்டன்

ரத்தம்...

மனித உடல் இயக்கத்துக்காக, உடல் முழுவதும் பாய்ந்து பரவும் உயிர் ஆதாரம் இது. A குரூப், B குரூப், O குரூப், AB குரூப் என்றும், இதில் பாஸிட்டிவ் - நெகட்டிவ் என்றும், ரத்தத்தின் வகைகள் பெரும்பாலும் அறியப்படுகிறது. இவற்றையெல்லாம் கடந்து இன்னொரு குரூப் ரத்தமும் இருக்கிறது. இதைப் பற்றி பெரும்பாலும் வெளியே அறியப்படவில்லை.

BOMBAY BLOOD GROUP

இந்த ரத்த வகையின் பெயர், 'BOMBAY BLOOD GROUP'. மருத்துவ உலகில் இந்த வகையை, 'H' குரூப் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த பாம்பே ப்ளட் குரூப், முதல்முறையாக கண்டறியப்பட்டது, இப்போது மும்பை என்று அழைக்கப்படும் பம்பாயில். இதன் காரணமாகவே 'பாம்பே ப்ளட் குரூப்' என்று பெயர் சூட்டப்பட்டது.

1952 ஆம் ஆண்டில் டாக்டர் பெண்டே என்பவர்தான், கண்டறிந்துள்ளார். இந்த வகை ரத்தம், இந்தியாவில் 60 ஆயிரம் பேரில் ஒருவருக்குதான் இருப்பதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் எண்ணிக்கை, 200க்கும் கீழேதான் இருக்கிறதாம். அந்த அளவுக்கு அரிதானது. பாம்பே ப்ளட் குரூப்பைச் சேர்ந்தவர்கள்தான் "UNIVERSAL DONOR".

சிறப்பு என்ன?

இந்த குரூப் ரத்தம் இருப்போர், எல்லா வகை ரத்தம் கொண்டோருக்கும் ரத்த தானம் செய்யலாம். ஆனால் பாம்பே ப்ளட் குரூப்பினருக்கு அதே குரூப் ரத்தம்தான் சேரும். இந்தியாவில் பாம்பே ப்ளட் குரூப் அரிதாக இருப்பதால், அதே குரூப்பினருக்கு மட்டுமே ரத்த தானம் செய்யும் நிலை உள்ளது.

பாம்பே ப்ளட் குரூப்பின் சிறப்பும் இதுதான்... பிரச்னையும் இதுதான். பாம்பே ப்ளட் குரூப்பைச் சேர்ந்த ஆணும் பெண்ணும், மணம் முடித்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். தம்பதியில் ஒருவர் வேறு குரூப்பைச் சேர்ந்தவராக இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு சோகை நோய் வர வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.