உடல் உறுப்புதானம்  முகநூல்
ஹெல்த்

மூளைச்சாவு அடைந்தவர்கள் எந்த உடல் உறுப்புகளையெல்லாம் வழங்கலாம்? யாரெல்லாம் தானம் செய்வதில் சிக்கல்?

உடல் உறுப்புதானம் குறித்த முக்கியத்துவம் என்ன? அதன் தேவை என்பது தற்போது எவ்வளவு தேவை ? போன்றவற்றை விளக்குகிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் ஜி.ஆர். இரவீந்திரநாத்.

ஜெனிட்டா ரோஸ்லின்

உடல் உறுப்புதானம் குறித்த முக்கியத்துவம் என்ன? அதன் தேவை என்பது தற்போது எவ்வளவு தேவை ? போன்றவற்றை விளக்குகிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் ஜி.ஆர். இரவீந்திரநாத்.

மருத்துவர் ஜி.ஆர். இரவீந்திரநாத் .

உடல் உறுப்பு தானம்:

உடல் உறுப்பு தானத்தை வரலாற்று ரீதியானகவும் அறிவியல் ரீதியாகவும் அளிக்கப்பட்ட மனித குலத்தின் மணிமகுடம் என்று கூறலாம். உடல் உறுப்புதானத்தை பொறுத்தவரை நிச்சயம் எதிர்காலத்திலும் மாற்றங்கள் வர இருக்கின்றனர். எனவே இதன் அடிப்படையில் பல்வேறு நோய்களினாலோ அல்லது பிறப்பினாலோ முக்கியமான உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்தால் இதனை செய்து கொள்ளலாம்..

எடுத்துக்காட்டாக கல்லீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் மற்றும் தோல், எலும்பு இவையெல்லம் பாதிக்கப்படும் போது பிறருடைய உடல் உறுப்புகளை பாதிக்கப்பட்டவருக்கு பொறுத்த முடியும்.

உடல் உறுப்பு தானம்

நமது மனித உடலை பொறுத்தவரை நம் உடலில் உள்ள பொருட்கள் தான் இயற்கையிலும் இருக்கிறது. இயற்கையில் உள்ள பொருட்கள் தான் உடலிலும் உள்ளது.நமது உடல் என்பது இயற்கையில் உயர்ந்தபட்ச பரிணாம வளர்ச்சியினால் உருவானது என்று கூறுவர்.

உடல் உறுப்புதானத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு இதனை ஊக்கப்படுத்தும் வகையில் உறுப்புதானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடம் அவர்களின் இறுதி சடங்கானது நடைபெறும் என்று அறிவித்து இருக்கின்றது. இது மிகவும் பாராட்டுக்குரிய ஒரு விஷயம் மற்றும் வரவேற்க கூடியதும் கூட. இதன் மூலமாக உறுப்புதானத்தில் பெயரில் நடக்கும் மோசடிகள் போன்றவற்றை தடுக்க முடியும். இதற்காக ஒன்றிய அரசும் தனி சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மாநில அரசும் தனி சட்டம் கொண்டு வந்துள்ளது. எனவே வர்த்தக நோக்குக்காக இல்லாமல் மனித நேய அடிப்படையிலும் பரஸ்பர அன்பின் அடிப்படையில் உறுப்புதானம் செய்ய முன்வர வேண்டும்.

யார்  உறுப்புதானம் செய்ய கூடாது?

ஏற்கனவே இது குறித்த விளக்கங்கள் மருத்துவத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் காமாலை, புற்றுநோய், எச்.ஐ.வி இது போன்ற கடுமையான தொற்று நோய்களாலும், நாய் கடி போன்றவற்றால் மூளைசாவு கூட அடைந்திருக்கலாம். இது போன்ற மோசமான தொற்று நோய் உடையவர்கள் தங்களின் உறுப்புக்களை தானம் செய்ய முடியாது.

யார் உறுப்புதானம் செய்ய கூடாது

அதேசமயம் சர்க்கரை நோய், உடல் ரத்த அழுத்தம் போன்றவற்றாலும் உடலின் சில உறுப்புகள் பாதிப்படையும் அபாயம் இருக்கிறது. இவர்கள் தங்களின் உறுப்புகளை தானம் செய்யும் போது அதனால் பெரிய பயன் ஒன்றும் இருக்காது. மேலும் புகைப்பிடித்தல் பழக்கம் நீண்ட காலமாக இருந்தால் இதனால் உடல் உறுப்புகள் ஒரு சிலது பாதிப்பு அடைந்திருக்கும். எனவே இத்தகைய பாதிப்பு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளை பெற முடியாது. மாறாக உடல் ஆரோக்கியம் உடையவர்கள் அனைவருமே உறுப்பு தானம் செய்யலாம்.

இதற்காக முக்கியத்துவம்:

இதன் முக்கியத்தும் என்னவென்றால் பரிணாம வளர்ச்சியில் இயற்கையில் இருந்து தோன்றிய மனிதர்கள் தங்களுடைய இறப்பிற்கு பிறகு தங்களின் உடல் உறுப்புகள் வீணாக மண்ணில் சென்று அழிவதையோ, தீக்கு இரையாவதையோ தடுத்து அதனை ஒரு சில உடல் உபாதைகளால் தங்களது உடல் உறுப்பானது பாதிக்கப்பட்டு அதை இழந்தவர்களுக்கு அதனை கொடுப்பது என்பது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இதுவே உயர்ந்தபட்ச மனிதாபி மானம். ஒரு காலத்தில் உறுப்புதானம் செய்ய கூடாது என்ற பழமைவாத கருத்துகள் இருந்தன. தற்போது அதிலிருந்து விடுபட்டு வந்திருக்கிறோம். எனவே மனிதாபிமானத்துடன் நாம் உறுப்பு தானம் செய்ய வேண்டும். அதற்கான விழிப்புணர்வையும் வழங்க வேண்டும்.

இப்பொழுதே பல முறைகளில் உறுப்புதானம் என்பது செய்யப்பட்டு வருகின்றது. உதாரணமாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை பெறும் பொருட்டு ஜீனோடிரான்ஸ்பிளாண்ட் என்ற முறையின் மூலமாகவும், சொந்த உறுப்புகளின் மூலமாகவும், குளோனிங் முறை மூலமாகவும் இதையெல்லாம் பயன்படுத்தி உறுப்புதானம் செய்ய விஞ்ஞானிகளால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றது. இப்பொழுது உறுப்பு தானம் இருந்தாலும் அதன் தேவைக்காக காத்திருப்போரின் பட்டியலானது அதிகரித்து வருகின்றது. ஆய்வகங்களில் உறுப்புதானம் செய்வதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பின்பற்றப்பட்டால் இத்தகைய பிரச்னைகளுக்கு உதவும் வண்ணமாக இருக்கும்.

மூளைச்சாவு அடைந்தவர்கள் எந்த உறுப்புகளையெல்லாம் வழங்கலாம்:

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்தும் , சில உறுப்புகள் உயிருடன் இருப்பவர்களிடமிருந்தும் பெறப்பட்டு அதனை வேறொருவருக்கு பொருத்த முடியும்.

குறிப்பாக கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை உயிருடன் இருப்பவர்களிடம் இருந்தும் பெற முடியும். மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து இதயம், நுரையீரல், தோல், எலும்பு, கரு விழி போன்றவற்றையும் பெறமுடியும். சில உறுப்புகளை பதப்படுத்தியும் சில உறுப்புகளை உடனடியாகவும் பொருத்தலாம்.

மூளைச்சாவு

மேலும் மூளைச்சாவு அடைந்து இறந்திருக்கிறார்கள் என்ற சான்றிதழானது உரிய நிபுணர்களால் வழங்கப்பட்டிருந்தால் இவர்களிடமிருந்து எல்லா விதமான உறுப்புகளையும் பெற்று கொள்ளலாம். மூளை செயல்பட வில்லை, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்றெல்லாம் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்து சான்றிதழை பெற்றிருந்தால் அவர்களது உறுப்புகள் என்பது தானமாக பெறப்படுகின்றது.

மேலும் சில நாடுகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை அவர்களின் உறவினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே பெறமுடியும் என்ற சட்டம் இருக்கின்றது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அத்தகைய சட்டம் என்பது இல்லை. எனவே இத்தகைய சட்டங்கள் வந்தால் மேலும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது. மேலும் அதற்குரிய விழிப்புணர்வுகளையும் வழங்க வேண்டும்.

எப்படி விபத்திலோ, மர்மமான முறையிலோ இறந்தால் பிரேத பரிசோதனை என்பது அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றதோ அதேபோல் இது போன்ற கருத்துகளும் கருத்து புரட்சியாளர்கள் மூலமாக பேசப்பட்டு அனைவரும் அதனை ஏற்று கொள்ளும் வகையில் ஒரு சட்டம் என்பது அமைக்கப்பட வேண்டும்.

எனவே இறப்பிக்கு பிறகும் வாழ முடியும் என்ற நிலையை உறுப்புதானம் வாயிலாக அடைய முடியுன் என்ற நிலையை அடைய முடியும்.