உடல் பருமன் முகநூல்
ஹெல்த்

"உடல் எடையை ஆரோக்கியமாக குறைப்பதுதான்..." - விளக்கமளிக்கும் மருத்துவர்கள்!

உடல் பருமன் என்பது எப்போதும் தீங்கு விளைவிக்கும் ஒன்றுதான். பக்க விளைவுகள் இல்லாமல் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் என்ன? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

PT WEB

ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் நலம், மனநலம் என்பது முக்கியம். இரண்டில் ஒன்று மாறினாலும் அவதிகள் பின்தொடரும். அப்படியான உடல் நல பாதிப்புதான் அதிக உடல் பருமன். உடல் பருமன் ஒன்றும் பெரிய நோய் கிடையாது என்றாலும், அது பல்வேறு நோய்கள் உருவாவதற்கு அடிதளமாக அமைகிறது. உடல் பருமனை BMI குறியீடு மூலம் படிப்படியாக பிரிக்கும் மருத்துவர்கள், அதில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் அதிகளவு உடல் பருமன் உள்வர்களுக்கு அறுவை சிகிச்சை என்பதுதான் சிறந்த தீர்வு என்கின்றனர்.

அறுவை சிகிச்சையில் சிக்கல்கள் இருந்தாலும், 95 சதவீதம் பாதுகாப்பானது என கூறும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நபரின் உடல் நலமும் முக்கியம் என்கின்றனர். எடை உடனடியாக குறைக்கப்படுவதால், பல்வேறு சிக்கலான நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ சிகிச்சைகள் பல வகையாக இருந்தாலும், சீரான டயட் மற்றும் உடற்பயிற்சி முக்கியம். தினசரி உடற்பயிற்சியும், அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பதும் உடல் எடையை குறைக்க சிறந்த வழி. உரிய ஆலோசனையின் படி உணவு பழக்க வழக்கத்தை பின்பற்ற வேண்டும், அப்போதுதான் உடல் எடை சீராக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் எடை அதிகரிப்பை கண்டறிந்த உடன், அதை சீராக வைத்திருக்க வேண்டியதை பின்பற்ற வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது.

மேலும் உடல் எடையை ஆரோக்கியமாக குறைப்பது எப்படி, ஏன் உடல் பருமன் வருகிறது என்பது தொடர்பாக மருத்துவர் கூறும் அறிவுரையை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!