(கோப்பு புகைப்படம்)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா, மதுரா மற்றும் மொராதாபாத் மாதிரியான பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலால் 51 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது அலை பரவக்கூடும் என்ற அச்சம் இந்தியாவில் எழுந்துள்ள நிலையில் இந்த மர்ம காய்ச்சல் மேலும் சிக்கலை கொடுத்துள்ளது.
முதற்கட்ட மாதிரிகளை ஆராய்ந்ததில் டெங்கு மற்றும் பூஞ்சை தாக்கு (Scrub Typhus) நோய் மாதிரியான அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆய்வுக் குழு ஒன்றையும் உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பி உள்ளது. அந்த குழு இன்று அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
மாநில அரசும் காய்ச்சல் பரவலை கட்டுக்குள் வைக்க சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகிறது. மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் நோடல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிலைமையை கண்காணித்து அரசுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.
கொரோனா தொற்றின் தீவிரம் ஒரு பக்கம் இருக்க இந்த மரம் காய்ச்சல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்கலாம் : ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய அணி? - ஒரு அலசல்