Meningitis என்று சொல்லக்கூடிய மூளைக்காய்ச்சல் பாக்டீரியாவால் வரக்கூடிய ஒரு அழற்சி நோய். மூளையைச் சுற்றியுள்ள திரவம் பாதிக்கப்படும்போது மூளைக்காய்ச்சல் ஏற்படலாம். மூளை மற்றும் முதுகெலும்பை பாதிக்கக்கூடியது. இதனால் மரணம் அல்லது நிரந்தர பக்கவாதம் ஏற்படலாம். சில நேரங்களில் வைரஸ் தொற்றுகளால் கூட மூளைக்காய்ச்சல் வர வாய்ப்புகள் உள்ளது.
புற்றுநோய், ரசாயானத்தால் வரும் எரிச்சல், பூஞ்சை, மருந்து ஒவ்வாமை போன்ற காரணங்களால் மூளைக்காய்ச்சல் வரலாம். இருமல், தும்மல் அல்லது பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட பொருட்களின்மூலம் இந்த காய்ச்சல் பரவும்.
வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள்
வைரஸ் மற்றும் பாக்டீரியா மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆரம்பத்தில் ஒரேமாதிரித்தான் இருக்கும். ஆனால் பாக்டீரியா மூளைக்காய்ச்சல் மிகவும் கடுமையானது. வயதைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுபடும்.
குழந்தைகளுக்கு,
பெரியவர்களுக்கு,
பாக்டீரியா காய்ச்சல் அறிகுறிகள்
இந்த அறிகுறிகளை வைத்து மட்டுமே, எந்த வகை காய்ச்சல் என்பதை தீர்மானிக்க முடியாது. உடனே மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.
பூஞ்சைத் தொற்று காய்ச்சல் அறிகுறிகள்
மூளைக்காய்ச்சல் அதிகமாகும் போது உடலில் ஆங்காங்கே தடிப்பு, படை, சிறு புள்ளிகள் ஏற்படும். ரத்தத்தில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்து தந்துகிகளை சுற்றியுள்ள உயிரணுக்களை குறிவைக்கின்றன. இதனால் உயிரணுக்கள் மற்றும் தந்துகிகள் சேதமடைந்து மெல்லிய ரத்தக்கசிவு ஏற்படும். நோய் தீவிரமடையும்போது படை மற்றும் புள்ளிகள் கருமையாகவும், பெரிதாகவும் வளர்ந்துவிடும்.
அடர்ந்த சரும நிறம்கொண்டவர்களுக்கு படை வெளியே தெரியாது. உள்ளங்கைகள் மற்றும் வாயின் உட்புறம் போன்ற பகுதிகளில் படை தெளிவாகத் தெரியும். சாதாரண சொறிக்கும், மூளைக்காய்ச்சலினால் வரும் சொறிக்கும் வித்தியாசம் இருக்கும்.
சிகிச்சை
பாக்டீரியா மூளைக்காய்ச்சல் ஏற்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அளிக்கும் சிகிச்சை இறப்பை தடுக்கும். பாக்டீரியா மூளைக்காய்ச்சலுக்கு குறிப்பிட்ட ஆன்டிபயாட்டிக் இல்லை. சம்பந்தப்பட்ட பாக்டீரியாவைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.
வைரஸ் மூளைக்காய்ச்சல் தானாகவே சரியாக வாய்ப்புள்ளது. நரம்பு வழியாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கமுடியும்.
பூஞ்சை காய்ச்சலுக்கு ஆன்டிஃபங்கல் சிகிச்சை அளிக்கப்படும்.