ஹெல்த்

உங்க Crush-ஐ Impress பண்ணனுமா? இந்த தவறுகளை தவிர்த்துடுங்க!

உங்க Crush-ஐ Impress பண்ணனுமா? இந்த தவறுகளை தவிர்த்துடுங்க!

JananiGovindhan

காதல் வாழ்வில் இருப்பது உலகின் உண்ணதமான உணர்வாகவே காதலிப்பவர்களுக்கு தோன்றும். அதுவும் தேடித் தேடி போய் தனக்கு பிடித்த நபரை காதலிக்க வைப்பது என்பது இதுநாள் வரை தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாக காதலிப்பவர்கள் காதலிக்கும் போது செய்யும் தவறுகள் பல வழிகளில் அவர்களுக்கே அதே பெரிய அடியாகவே வந்து நிற்கும்.

அந்த வகையில் என்ன மாதிரியான தவறுகளெல்லாம் இந்த காதலிப்பவர்களும், குறிப்பாக Crush-களிடம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்னென்ன? அதனால் உண்டாகும் விளைவுகள் என்னென்ன என்பன பற்றி பார்க்கலாம்.

உங்கள் வாழ்க்கை முறை & பழக்கங்களை மாற்றிக்கொள்ளுதல்:

பொதுவாகவே தங்களுக்கு பிடித்தமானவர்களை கவருவதற்காக அவர்களுக்கு பிடித்த சில பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வது. குறிப்பாக உணவு பழக்கங்கள், உடையணிவது போன்றவற்றை அந்த நபருக்கு பிடிக்க வேண்டி மாற்றிக்கொள்வார்கள். 

ஆனால் நீங்கள் உடை அணிவதும், பிடித்த உணவை உண்பதும் உங்களுக்கான தனித்துவமான ஒன்று. அதனை ஒரு நபருக்காக மாற்றிக்கொண்டு பின்னர் உனக்காகத்தான் எல்லாம் செய்தேன் என சொல்லி காண்பிப்பதற்கு பதில் என் பழக்கம் என் வழக்கம் என்னுடைய வாழ்க்கை முறை இதுதான் என தெளிவுபட தெரியப்படுத்துவதே நல்லது.

ஏனெனில் குறிப்பிட்ட அந்த நபர் மீதான உணர்வு பரஸ்பரம் இருக்கும்பட்சத்தில் ஒருவரது பழக்க வழக்கங்களை மற்றோருவருக்காக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே ஏற்படாதபோது, உங்கள் காதலை, உங்களை ஏற்றுக்கொள்வதற்காக தற்சமயத்திற்கு என எந்த மாற்றத்தையும் செய்து பின்னால் நொந்துக்கொள்ள வேண்டாம்.

நண்பர்களை புறக்கணிப்பது:

வெறும் crush ஆக இருந்த உறவு ஒரு கட்டத்தில் தினசரி தொடர்புநிலை அளவுக்கு மாறியப் பிறகு வழக்கமாகவே நண்பர்களுடனான பேச்சுவார்த்தையை குறைத்து விடுவார்கள். ஏனெனில் காதலிக்கும் அந்த நபர் விட்டுச் சென்றிடுவாரோ என்ற பயத்தால் நண்பர்களிடம் பேசாமல் இருப்பார்கள். 

எது எப்படி இருந்தாலும், காதலிக்கும் நபர்களிடம் எப்படி நேரம் செலவழிக்க முடியுமே அதே போல நண்பர்களுடனும் அளவளாவதும் முக்கியமே. நண்பருக்காக காதலி/காதலன், அவர்களுக்காக நண்பர்களை விட்டுத் தருவது ஆரோக்கியமான உறவு முறையை கொண்டிருப்பதாகாது.

எல்லாவற்றுக்கும் ஆமாம் என தலையாட்டுவது:

தான் காதலிப்பவர்கள் என்ன கூறினாலும் மறு வார்த்தையே பேசாது, அவர்கள் தவறாகத்தான் சொல்கிறார்கள் என தெரிந்தும், எங்கே அவர்களை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் அதற்கு ஆமாம் என தலையசைப்பது மற்ற எல்லாவற்றையும் விட தவறான அணுகுமுறையாகும்.

அந்த காதலன்/காதலி சொல்லும் அனைத்திற்கும் தலையசைத்தால் சமயத்தில் அது Taken Granted என்ற எல்லைக்கே செல்லும். இதனால் அந்த உறவு கடைசியில் டாக்சிக்காகவே மாறும் அளவுக்கும் இட்டுச் செல்லும். ஆகையால் அவர்கள் சொல்வது தவறு என தெரிந்தால் அதனை அப்போது அவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் எடுத்துக் கூறுவதுதான் நல்லது.

இப்படியாக காதலிக்கும் போது அந்த நபருக்கு ஏற்றவாறு நடை, உடை, பாவணைகளை மாற்றிக் கொண்டு திருமணம் ஆனதும் சுய ரூபத்தை காட்டி அவர்களிடம் ஆதிக்கத்தை செலுத்துவதோ அல்லது எல்லாம் உனக்காகதான் செய்தேன் என சொல்லிக் காட்டுவதற்கு பதில் காதலிக்கும் போது தத்தம் பழக்க வழக்கங்களை தெளிவாக சொல்லியும், செயலில் காண்பித்தும் நல்லவையாக இருந்தால் இருவரும் பகிர்ந்துக் கொண்டும், கெட்ட பழக்கங்களாக இருந்தால் அதனை கலந்து பேசி நிறுத்திக் கொண்டும் ஆரோக்கியமான வாழ்வை தொடருவதே சாலச் சிறந்தது.