எம்-பாக்ஸ் தொற்று புதிய தலைமுறை
ஹெல்த்

‘இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் தொற்று அறிகுறி.. ஆனால் அச்சப்பட வேண்டாம்’ - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

PT WEB

இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு எம்-பாக்ஸ் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட இளைஞர், எம்-பாக்ஸ் தொற்று கண்டறியப்பட்ட நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அந்த நபரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை

எம்-பாக்ஸ் தொற்றை உறுதி செய்ய அவரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள எம்- பாக்ஸ் தொற்றால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.