கிளேட் 1பி முகநூல்
ஹெல்த்

கேரளா: இந்தியாவிலேயே முதன்முறை... குரங்கம்மையின் புதிய வகை திரிபு!

கேரளாவில் எம்.பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபருக்கு புதிய வகையான தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

இந்தியாவிலேயே முதல்முறையாக குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான கிளேட் 1பி தொற்றதால் கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, கேரள மாநிலம் மலப்புரம் வந்த 38 வயது நபருக்கு கடந்த வாரம் எம்.பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எம். பாக்ஸின் புதிய வகையான 'கிளேட் 1பி' தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வேகமாக பரவக்கூடிய இந்தப் புதிய வகை எம்.பாக்ஸ் பாதிப்பு, இந்தியாவில் கண்டறியப்பட்டுவது இதுவே முதல்முறையாகும். இதனால், கேரளாவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் இந்தப் புதிய வகை எம்.பாக்ஸ் வேகமாக பரவக்கூடியது என்பதோடு, கிளேட் 1, 2 ஆகிய வகைகளை விட ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் புதிய வகை பரவலால், உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் இரண்டாவது முறையாக பொது சுகாதார அவசர நிலையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.