கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், பழங்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். அதேபோல கோடை சீசனுக்கு ஏற்ப சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு மா, பலா, கிர்ணி, தர்பூசணி, முலாம் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம், திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலையும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆம்தேதிக்கு முன்பு பழங்கள் விலை குறைவாக இருந்த நிலையில், தற்போது கிலோவுக்கு 20 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சீசன் சமயங்களில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது என்றாலும், கோடைக்காலத்தில் கூடுதல் கவனத்துடன் நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை உட்கொள்வது உடலுக்கு மிகவும் ஏற்றது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
சென்னையில் பழங்கள் விலை
பழம் கடந்த வாரம் - இன்று
சாத்துக்குடி ₹45 - ₹70
பைனாப்பிள் ₹50 - ₹70
தர்பூசணி ₹6 - ₹10
ஆப்பிள் ₹150 - ₹200
ஆரஞ்சு ₹50 - ₹70
திராட்சை ₹50 - ₹80
பப்பாளி ₹15 - ₹25
சப்போட்டா ₹20 - ₹60
மாதுளை ₹150 - ₹250
கொய்யா ₹30 - ₹60