ஐசிஎம்ஆர்  முகநூல்
ஹெல்த்

வீட்டு உணவுகளும் ஆரோக்கியமற்றதா? ஐசிஎம்ஆர் அறிக்கை சொல்வதென்ன? மாற்று வழி என்ன?

வீட்டில் சமைக்கும் உணவுகளும்கூட எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

வீட்டில் சமைக்கும் உணவுகளும்கூட எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

வீட்டில் சமைக்கும் எந்தவகையான உணவுகளும் ஆரோக்கியமான ஒன்றுதான் என்பது அதிகமானோரால் முன்வைக்கப்படும் கருத்துகளில் ஒன்று.. காரணம் குறைவான எண்ணெய், சுகாதாரமாக தயாரிப்பது, அன்றாடம் புதிய பொருட்களை பயன்படுத்தி சமைப்பது போன்றவைதான்.. ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சின், வீட்டில் செய்யப்படும் உணவுகளும்கூட எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை என்ற கூறுகிறது.

மேலும், அதிக கொழுப்பு, சர்க்கரை அல்லது உப்பு பயன்படுத்துவது ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் ஆபத்தாக அமைகிறது என்றும் தெரிவிக்கிறது.. சரி இதில் வீட்டில் சமைக்கு உணவுகள் ஏன் சில நேரங்களில் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை.

ஐசிஎம்ஆரின் படி, அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிரம்பிய உணவில் ஆற்றல் அடர்த்தி என்பது அதிகமாக இருக்கும் .(ஆற்றல் அடர்த்தி என்பது ஒரு கிராம் உணவில் உள்ள கலோரிகளின் அளவு.) அதாவது கலோரிகள் அதிகமாக இருக்கும்.

எனவே, இவ்வகையான உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, உடல் பருமன் அதிகரிக்கிறது. அதேசமயம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் புரதம், வைட்டமின்கள், நார்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் சரிவர உடலுக்கு கிடைப்பதில்லை.

மேலும், நிபுணர்களின் கூற்றுபடி, உணவை சுவையாக வைத்திருக்க அதிகளவு எண்ணெய், சர்க்கரை, பட்டர், மசாலாப் பொருட்கள் போன்றவற்றை அதிகமானோர் சேர்க்கிறார்கள். பூரி போன்ற உணவுகள் அதிகளவில் எண்ணெய்யில் பொரிக்கப்படுவதால், உடல் எடை சார்ந்த பிரச்னைகள், டைப் 2 நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது.

மேலும், உணவு சமைக்க பெரும்பாலானவர்கள் பதப்படுத்தப்பட்ட இஞ்சி , பூண்டு பேஸ்ட், தக்காளி பியூரி போன்றவற்றை சேர்க்கிறார்கள்.. இவற்றில் நச்சுத்தன்மையை விளைவிக்கக்கூடிய நிறமிகள் சேர்க்கப்படுகிறது.

மேலும், இதனை வீடுகளில் பயன்படுத்தி சமைக்கும்போது வீட்டு உணவு ஆரோக்கியமற்றதாக மாறுகிறது.

இதற்கு அடுத்தபடியாக, காய்கறிகளை அதிக வெப்பநிலையில் வைத்து சமைத்து overcooking செய்யும்போது, அது காய்கறிகளில் இருக்கக்கூடிய சத்துக்களை அகற்றுகிறது.

வீட்டில் சமைக்கும் உணவுகளை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?

  • சமைப்பதற்கு கடுகு எண்ணெய் மற்றும் நெய்யை பயன்படுத்தலாம்.

  • உணவை டீப் ஃப்ரை செய்வதற்கு மாறாக, கிரில், பான் ஃப்ரையிங் , ஏர் ஃப்ரையிங் செய்யலாம்.

  • நீங்கள் அரிசி சாப்பிடுபவர்கள் என்றால், பிரியாணி அல்லது புலாவ் போன்றவற்றிக்கு steamed rice அல்லது brown rice ஆகியவற்றை பயன்படுத்துங்கள். சாதத்துடன் சாப்பிடுவதற்கு பருப்பு மற்றும் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள்.

  • மேலும், பரோட்டா, நான் போன்றவற்றிக்கு பதிலாக சப்பாத்தியை சாப்பிடலாம். ஏனெனில், நான், பரோட்டா மைதாவில் செய்யப்படுகிறது. இதில், 250-300 =கலோரிகள் இருக்கிறது. சரியாக சமைக்கவில்லை எனில், 600 கலோரிகளை வரை செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

  • அதிகளவு மசாலாப் பொருட்களை சேர்ப்பதற்கு மாறாக herbs மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

  • ஆரோக்கியமான உணவுகளை கூட சரியான விகித்ததில் சாப்பிடவில்லை எனில், அதுவே உடலுக்கு ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்..

  • மேலும், இரவு உணவுக்கு நாம் விரும்பும் உணவின் அளவை விட சற்று குறைவாகவே சாப்பிடலாம்.