தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் இணைந்து உணவு பழக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேநீர் மற்றும் காபி அதிகளவு அருந்துவதால், மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மனரீதியான பிரச்னைகளை உருவாக்குகிறது என்றும் தெரிவித்துள்ள ஐ.சி.எம்.ஆர்., உணவு உண்ட பிறகோ, அல்லது உணவுக்கு முன்பு தேநீர் அல்லதுகாபி அருந்துவது செரிமானத்தை பாதிக்கிறது என எச்சரித்துள்ளது.
உணவில் உள்ள இரும்புச் சத்தை எடுக்க கஃபின் விடுவது இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேநீர் மற்றும் காபி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.