கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் சொல்வதென்ன முகநூல்
ஹெல்த்

அதிகரிக்கும் வெப்ப அலை! கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் சொல்வதென்ன?

வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் என்ன ? கர்ப்பிணிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் சுகன்யா.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியா முழுவதும் கோடை காலத்தின் வெப்ப அலை வீசி கொண்டிருக்கிறது. நாளாக ஆக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், வெப்ப அலை அதிகரிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கமாக மே மாதம் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திர காலத்தில் தான் அதிக வெப்பம் இருக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கத்தரி வெயில் துவங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்கிற துவங்கியுள்ளது.

வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் தாக்கக்கூடும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு கூடுதல் அசௌகரியத்தினை ஏற்படுத்தும். இந்நிலையில், வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் என்ன ? கர்ப்பிணிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் சுகன்யா.

மருத்துவர் சொல்வதென்ன?

  • வெயில் காலங்களில் மற்றவர்களை காட்டிலும் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

  • கோடை காலங்களில் சாதாரணமாகவே, நீர்ச்சத்து என்பது அனைவருக்கும் குறைவாக இருக்கும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மற்றவர்களை காட்டிலும் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும்.

  • வெயிலில் உச்சி நேரத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. வெயில் செல்லும்போது பருத்தி ஆடைகளை அணிந்து செல்வது சிறந்தது.

  • நீர்சத்து பற்றாக்குறையை கையாள அதிகளவு தண்ணீர்,காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்வது அவசியம்.

  • மோர், இளநீர், நொங்கு சாப்பிடலாம். இதன் மூலம் கர்ப்பக்கால பிரச்னைகளை தடுக்கலாம்.

  • உடல்சோர்வு, மயக்கம் அதிகமாக இருக்கும், கால் பிடித்து இழுப்பது போல உணர்வு,கால் வீக்கம்,குறைமாத பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது

  • நீர்ச்சத்து சரியாக இல்லாதபோது பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு.