ஹெல்த்

குடல் இயக்கத்தை மேம்படுத்தணுமா? - தினசரி போதுமான அளவு நார்ச்சத்து தேவை!

குடல் இயக்கத்தை மேம்படுத்தணுமா? - தினசரி போதுமான அளவு நார்ச்சத்து தேவை!

Sinekadhara

நார்ச்சத்து உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை தூண்டுவதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராமல் தடுப்பதிலும் நார்ச்சத்தின் பங்கு அதிகம். மேலும் இது நீரிழிவு மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

எனவே தினசரி டயட்டில் போதுமான அளவு நார்ச்சத்து இடம்பெற வேண்டும். போதுமான நார்ச்சத்து உடலுக்கு கிடைக்காவிட்டால் பல்வேறு உடல்நல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தினசரி உணவில் போதுமான நார்ச்சத்தை சேர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஓட்ஸ்: ஓட்ஸ் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் வெறுமனே ஓட்ஸை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அதை கேக்குகளாக பேக் செய்துகூட சாபிடலாம். இது நார்ச்சத்து உடலில் சேர்வதை உறுதிசெய்கிறது.

காலை உணவு: ஒரு நாளுக்கு தேவையான நார்ச்சத்து உடலில் சேர்வதை காலை உணவு உறுதிசெய்வது அவசியம். காலை உணவில் பழங்கள், போதுமான காய்கறிகள் போன்றவற்றை சேர்ப்பது உடலுக்கு தேவையான நார்ச்சத்தை கொடுக்கும்.

ஸ்மூதீஸ் அல்லது சாலட்: ஸ்மூதி அல்லது சாலட்டில் நார்ச்சத்து மிகுந்த பழங்களை சேர்த்துக்கொள்வது அவசியம். பேரிக்காய் போன்ற நார்ச்சத்து மிகுந்த பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்த ஆப்ஷன்.

பாதம் மற்றும் வால்நட்: பாதாம் மற்றும் வால்நட் போன்ற உலர் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசி உணர்வை குறைப்பதோடு உடலுக்குத் தேவையான நார்ச்சத்தையும் வழங்குகிறது. இதனுடன் சியா விதைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்வது போதுமான நார்ச்சத்தை கொடுக்கும்.