எச்.ஐ.வி  முகநூல்
ஹெல்த்

சிறுவனுக்கு எச்.ஐ.வி பாசிடிவ் என வெளியான பரிசோதனை முடிவுகள்! இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை!

சிறுவனுக்கு எச்.ஐ.வி உள்ளது என தனியார் ரத்த பரிசோதனை மையம் மோசடியாக பரிசோதனை அறிக்கை வழங்கியதாக எழுந்த புகார் குறித்து, மதுரவாயல் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

PT WEB

சிறுவனுக்கு எச்.ஐ.வி உள்ளது என தனியார் ரத்த பரிசோதனை மையம் மோசடியாக பரிசோதனை அறிக்கை வழங்கியதாக எழுந்த புகார் குறித்து, மதுரவாயல் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் சேர்ந்த 15 சிறுவனை உயர்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப, அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் சிறுவனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவனுக்கு HIV பாசிட்டிவ் என ரிப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், மற்றொரு இடத்தில் பரிசோதனை செய்தபோது, HIV நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் வழக்கறிஞருமான கார்த்திக் என்பவர், பரிசோதனை மையம் மோசடி செய்ய முயன்றதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். HIV பாசிட்டிவ் என வந்தால் அதனை உறுதி செய்ய இன்னொரு பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், அச்சோதனையை நடத்தி பணம் பறிக்கவே, சிறுவனுக்கு பொய்யான ரிப்போர்ட் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்தநிலையில் இந்த விவாகரம் குறித்து விளக்கமளித்துள்ள தனியார் பரிசோதனை மையம், தொழில்நுட்ப கோளாறால் சிறுவனின் ரிப்போர்ட் தவறாக வந்துள்ளதாகவும், தற்போது சிறுவனின் பெற்றோர் தங்களுடன் சமரசம் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளது. அதேவேளையில், கார்த்திக்கின் புகார் குறித்து மதுரவாயல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.