ஹெல்த்

நைட் ஷிப்ட்டில் பணிபுரிபவர்களா? - உங்கள் ஆரோக்கியத்திற்கு...

நைட் ஷிப்ட்டில் பணிபுரிபவர்களா? - உங்கள் ஆரோக்கியத்திற்கு...

Sinekadhara

பகல்நேர வேலை செய்பவர்களைவிட இரவு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் சர்க்கார்டியன் சுழற்சியின் ஏற்படும் மாற்றம்தான். இரவு நேரம் பணிபுரிபவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில டிப்ஸ்...

காபியிலேயே உடலை இயக்கவேண்டாம் - இரவு நேரத்தில் கண் விழித்து வேலைசெய்ய பலரும் காபி அருந்துவர். சிலர் அளவுக்கு அதிகமாக அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் காபியின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.

தூக்க அட்டவணையை அமையுங்கள் - நைட் ஷிப்ட் பணியாளர்களுக்கு கண்டிப்பாக இரவில் உறக்கம் இருக்காது. ஆனால் உடல் ஓய்வெடுப்பதை ஒருவரால் நிச்சயமாக தடுக்கமுடியாது. எனவே இரவில் இழந்த தூக்கத்தை பகலில் தூங்கி கழிக்கவேண்டும்.

ஓய்வுநேரத்தை திட்டமிடலாம் - ஒவ்வொருவருக்கும் வேலையைத் தவிர தனிப்பட்ட வாழ்க்கை என்பது இருக்கிறது. நேரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்துவதன்மூலம் குறிப்பிட்ட நேரத்தில் பிற வேலைகளை செய்துமுடிக்கலாம். இது ஒருவருடைய மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

உணவு மற்றும் உடற்பயிற்சி - ஆரோக்கியத்திற்கு டயட் மற்றும் உடலுழைப்பு மிக மிக அவசியம். முறையான உணவு மற்றும் உடற்பயிற்சியை வழக்கமாக்குவதன்மூலம் உடல் மற்றும் மனநலம் மேம்படும்.

உங்களை புறக்கணிக்காதீர்கள் - உடல் மற்றும் மனநலம் மற்றும் சிறந்த வாழ்க்கைக்கு உங்கள்மீதே கவனம் செலுத்துவது அவசியம். யோகா, தியானம் மற்றும் சரும பராமரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.