மிகவும் மலிவான அதே சமயம் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழவகைகளில் ஒன்று வாழைப்பழம். ஆனால், டயட் இருப்பவர்கள் இந்த பழத்தை தவிர்த்துவிடுவர். அதற்கு காரணம் வாழைப்பழம் உடல் எடையை அதிகரித்துவிடும் என்ற தவறான எண்ணம்தான். ஆனால் உண்மையில் குறைந்த கலோரிகள் மற்றும் பூஜ்ஜியம் கொழுப்பு கொண்ட உணவுப்பொருள் இது. மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. முறையான வளர்சிதை மாற்றம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
- வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது செரிமானத்தை அதிகரிக்கிறது.
- வாழைப்பழத்தில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இதை அடிக்கடி சாப்பிடுவது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இது எலும்பு வலிமையை அதிகரிக்கிறது.
- வாழைப்பழத்தில் ஆரோக்கியமான நார்ச்சத்து அடங்கியிருப்பதால் செரிமானத்தை அதிகரித்து உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
- வாழையில் நார்ச்சத்துடன் ப்ரோபயோட்டிக்ஸும் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இதில் வைட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க சிலவகை வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க நார்ச்சத்து அவசியம் என்கிறது சில ஆய்வுகள். நார்ச்சத்து மிகுந்த வாழைப்பழமானது சர்க்கரை நோயாளிகளின் நண்பன் எனலாம்.
- மற்ற பழங்களைப்போல வாழைப்பழத்தை கழுவி, நறுக்கி சாப்பிட வேண்டிய அவசியமெல்லாம் இருக்காது. போகும் வழியிலேயே கூட பழத்தை சாப்பிட்டுக்கொண்டே செல்லலாம்.