Gym 
ஹெல்த்

"அதிக அளவில் ஸ்டீராய்டுகளை எடுக்க காரணம் இதுதான்" - ஜிம் பயிற்சியாளர்

அனபாலிக் ஸ்டீராய்டுகள், பாடி பில்டர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

Snehatara

கட்டுமஸ்தான உடலைப் பெறுவதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதால், பலவித பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்களும், உடற்பயிற்சி வல்லுநர்களும் எச்சரிக்கிறார்கள்.

உடலில் உருவாகும் வீக்கம் போன்ற பிரச்னைகளை எதிர்க்க, இயற்கையாக மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களைப் போன்றே, வீக்கங்களை குறைக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித ரசாயனம்தான் ஸ்டீராய்டுகள். ஸ்டீராய்டுகள் உடலுக்கு உள்ளேயும், சில வெளியேயும் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளே எடுக்கும் ஸ்டீராய்டுகளை பொதுவாக கார்டிகோஸ்டீராய்டுகள் (Corticosteroids) என்று அழைக்கின்றனர். இவை, அனபாலிக் ஸ்டீராய்டுகளில் (Anabolic Steroids) இருந்து சற்று மாறுபட்டவை. அனபாலிக் ஸ்டீராய்டுகள், பாடி பில்டர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார் ஜிம் பயிற்சியாளர் பிரசாத்.

ரத்தத்தை உறையச் செய்தல், ரத்த ஓட்டத்தைப் பாதித்தல், இதயப் பாதிப்புகளை ஏற்படுத்துதல், சிறுநீரகச் செயலிழப்பு என உயிரைப் பறிக்கும் அளவுக்கான பாதிப்புகளை ஸ்டீராய்டுகள் ஏற்படுத்தக்கூடியவை என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

முறையான அறிவுரையின்றி ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வதும் முற்றிலும் தவறு என எச்சரிக்கும் மருத்துவர்கள், அதீத உடற்பயிற்சி செய்வோர், ஆணழகன் போட்டிகளுக்குத் தயாராவோர், 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீரகப் பரிசோதனை, இதயம் மற்றும் ரத்தப் பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.