பறவை காய்ச்சல் முகநூல்
ஹெல்த்

உலகளவில் இன்ஃப்ளூயன்ஸா A(H5N2) வைரஸால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவை சேர்ந்த நபர் உயிரிழப்பு

மெக்சிகோவை சேர்ந்த நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மெக்சிகோவை சேர்ந்த நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பெருந்தொற்றாக உருவெடுத்து, பேரிழப்பை ஏற்படுத்தியதை மறக்கமுடியாது.இதுப்போல, காலத்திற்கு ஏற்றார் போல புதுபுது தொற்றுகள் உருவெடுத்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில், வெகுநாட்களாக அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது பறவை காய்ச்சல். ஆனால், இத்தொற்று மனிதர்களின் கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்ட சூழலில், முதல் முறையாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோசை சேர்ந்த 59 வயது ஒருவருக்கு, வெகுநாட்களாகவே காய்ச்சல், மூச்சுத்திணறல் , வயிற்றுப்போக்கு, குமட்ட உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிக்சிசை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி, இவர் தீடீரென உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, உயிரிழந்த இவர் பறவை காய்ச்சலின் பாதிப்பால் உயிரிழந்துள்ளார் என்று தெரிந்துள்ளது. இத்தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில், “ உலகளாவிய ரீதியில் இன்ஃப்ளூயன்ஸா A(H5N2) வைரஸால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். இவர் பறவை காய்ச்சலால் உயிரிழந்த முதல் நபர்.

இறந்த நபருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. மேலும், அவருக்கு தொற்று எவ்வாறு பரவியது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அருகில் இருந்தவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், யாருக்கும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை.” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் உள்ள 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் உள்ள கோழிகள் மற்றும் மாடுகளுக்கும் பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பசு மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலில் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்5என்1 வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதனால் உலக சுகாதார நிறுவனம் பச்சையாக பாலை உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் இத்தொற்று பறவைகளில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும்,பறவைகளில் மட்டுமே கண்டறியப்பட்ட இக்காய்ச்சல் மனிதர்களில் இதற்காக பாதிப்பு இதுவரை கண்டறியப்படாத சூழலில், பறவை காய்ச்சலால் மனிதர் ஒருவர் உயிரிழந்து பெரும் அச்சத்தை ஏறபடுத்தியுள்ளது.