ஹெல்த்

என்னாது! படுத்தவுடன் தூக்கம் வந்தா உடலுக்கு கெடுதலா? - என்ன சொல்கிறார் நிபுணர்?

என்னாது! படுத்தவுடன் தூக்கம் வந்தா உடலுக்கு கெடுதலா? - என்ன சொல்கிறார் நிபுணர்?

Sinekadhara

படுத்தவுடனே தூக்கம் வரவேண்டும் என்பது பலருடைய கனவு. நன்றாக தூக்கம் வருவதற்கு படுக்கைக்கு செல்லும் முன்பு செல்போன், டிவி போன்றவற்றை பார்ப்பதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிறைய நிபுணர்கள். பொதுவாக உடல் அயர்ச்சியாக இருந்தாலோ, கண் வறட்சியாக இருந்தாலோதான் ஒரு நபருக்கு படுத்தவுடன் தூக்கம் வரும். இப்படி பலருக்கும் தூக்கம் வந்தாலும், நிறைய பேருக்கு படுத்தவுடன் தூங்கவேண்டும் என்பதே கனவாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் எது நல்லது? படுத்தவுடன் தூங்குவதா? அல்லது மெல்ல தூக்கம் வருவதா?

நன்றாக 7 மணிநேரம் தூங்கிவிட்டு காலை சில நிமிடங்களில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பது நமக்கு ஆரோக்கியமானதாக தெரிந்தாலும், அதனை கெட்ட அறிகுறி என்கிறார் ஒரு நிபுணர். படுத்த 5 நிமிடங்களுக்குள் அசைவின்றி தூங்குவது, தூக்க பற்றாக்குறையை குறிப்பதாக விளக்குகிறார் தூக்க ஆராய்ச்சியாளரான டாக்டர் சோபி போஸ்டோக். ஒரு நபர் சோர்வாக இருக்கும்போது தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இது அந்த நபரின் தூக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது என்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ”தலையணையில் தலை சாய்த்தவுடன் உடனடியாக தூங்குகிறீர்கள் என்றால் இது தூக்க பற்றாக்குறையை குறிக்கிறது. படுக்கையில் படுத்தவுடன் வெறும் ஐந்தே நிமிடங்களில் தூங்கிவிட்டால், நீங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குவது முழுமையான தூக்கத்தை கொடுக்கும்.

படுத்தபிறகு 15 - 20 நிமிடங்களில் தூக்கம் வருவது சாதாரணமானது. எப்படியாயினும், தினசரி ஒரு நபர் படுத்தபிறகு எப்போதுமே 30 நிமிடங்களுக்கு பிறகுதான் தூக்கம் வருகிறது என்றால் அந்த நபர் தனது தூக்க பழக்கத்தை மாற்றியமைக்கவேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே சோர்வாக இருப்பவர்கள் தூக்கத்தை தள்ளிப்போடுவதால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சோர்வாக இல்லாதபோது எந்த நேரத்தில், எப்படி தூங்குவது என்பது பற்றிய முடிவை எடுக்க முயற்சியுங்கள். சோர்வாக இருக்கும்போது தூக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதுதான் பிரச்னைகளுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது. எனவே தூக்க பழக்கத்தை மேம்படுத்த சோர்வாக இருக்கும்போதே படுக்கைக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்” என்கிறார்.