ஹெல்த்

’’வாய் சுத்தமின்மை அறிவாற்றல் சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்’’ - அதிரவைக்கும் ஆய்வு

’’வாய் சுத்தமின்மை அறிவாற்றல் சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்’’ - அதிரவைக்கும் ஆய்வு

Sinekadhara

உடல்நலத்தை பேணிகாப்பதில் வாய்சுத்தம் முக்கியப்பங்கு வகிக்கிறது. உடலில் மெட்டபாலிசம் மற்றும் இதய ஆரோக்கியத்தில் வாய் சுத்தம் முக்கியப்பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அறிவாற்றலை மேம்படுத்துவதிலும் இதற்கு தொடர்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். சில ஆரோக்கிய பழக்கவழக்கங்கள் அல்மைசர் நோய் வரமால் தடுப்பதாகக் கூறுகின்றனர். பல் ஈறு பிரச்னைகளும், அல்மைசர் பிரச்னையும் டிமென்ஷியாவின் பிற வடிவங்களாகப் பார்க்கப்படுகிறது.

Tufts University School of Dental Medicine நிபுணர்கள் இதுபற்றி கூறுகையில், எலிகளை வைத்து நடத்திய சோதனையில் அல்சைமர் அபாயத்தை அதிகரிக்கும் எஃப். நியூக்ளியேட்டம் என்ற பாக்டீரியா இருப்பதாகக் கூறுகின்றனர். இது அழற்சியை ஏற்படுத்துவதுடன், அல்சைமர் அதிகமாக வழி வகுக்கும். மேலும் இறந்த நியூரான்களை மூளை அகற்றும் வேலையையும் மோசமாக பாதிக்கலாம் என்கின்றனர்.

பல் ஈறு பிரச்னைகள் மற்றும் அல்சைமருக்கான தொடர்பை பற்றி இந்த ஆய்வு முழுமையாக விளக்காவிட்டாலும், வாய் சுத்தமின்மை இதன் அறிகுறிகளை மோசமாக்கும் என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறது.

பல் ஈறு பிரச்னைகள் வராமல் தடுக்கும் வழிகள்:

வயதாக ஆக அதற்கேற்றார்போல் வாய் சுத்தத்தை பேணிக்காப்பதன்மூலம் ஈறு நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். குறிப்பாக கேன்சர், நீரிழிவு மற்றும் புகைபிடிக்கும் பழக்கமுடையவர்கள் வாய் சுத்தத்திற்கு கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சில எளிய வழிகள் ஈறு பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும்

1. 6 மாதத்திற்கு ஒருமுறை பல்மருத்துவரை அணுகவும்
2. தினமும் இரண்டு முறை பல்துலக்கவும்
3. பல் துலக்கிய பிறகு துப்பவும், அப்படியே கழுவ வேண்டாம்
4. பற்களுக்கு இடையே ஃப்ளோஸ் செய்து அடிக்கடி சுத்தம்செய்யவும்
5. 3 மாதங்களுக்கு ஒருமுறை ப்ரஷ்ஷை மாற்றவும்
6. புகைபிடித்தல் கூடாது

நிறையப்பேருக்கு அல்சைமர் பிரச்னை பரம்பரை வியாதியாகக் கூட இருக்கலாம். இருப்பினும், முறையாக டயட் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் இந்த பிரச்னையை சமாளிக்கலாம்.