வாரத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தாலே போதும்... 200 வகை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும் என்கிறது அமெரிக்க மருத்துவ சங்க இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை.
மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷான் குர்ஷித் என்பவர் ஆய்வு அடிப்படையில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. இதில், "வாரத்தின் 7 நாட்களும் தினசரி 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதில் கிடைக்கும் பலனானது, வாரத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் 150 நிமிடம் உடற்பயிற்சி செய்வதிலேயே கிடைத்துவிடும்" என கூறப்பட்டுள்ளது.
இருதய பாதிப்பு, பக்கவாத பாதிப்பு வாய்ப்புகள் இந்த தீவிர பயிற்சியால் வெகுவாக குறையும் என்கிறது கட்டுரை. 90 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.