pre-diabetes Facebook
ஹெல்த்

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில்(pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? மருத்துவர் சொல்வதென்ன?

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில்(pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? ...இது குறித்து மருத்துவர்கள் சொல்வதென்ன?.. விரிவாக காணலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா? ... நீரிழிவு மருத்துவர் ராஜ் குமார் சொல்வதென்ன?

நீரிழிவு மருத்துவர் ராஜ் குமார்

pre-diabetes என்பது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை...fasting blood sugar மூலம் அதாவது வெரும் வயிற்றில் எடுக்கக்கூடிய ரத்த சர்க்கரையின் அளவை கண்டறிவதன் மூலமும் இதனை கண்டறியலாம். வெரும் வயிற்றில் எடுக்கக்கூடிய ரத்த சர்க்கரை என்பது, 8 மணி நேரமாக எதுவும் சாப்பிடாமல்...

  • காலையில் ரத்த சர்க்கரையின் அளவை சோதனை செய்ய வேண்டும். இப்படி எடுக்கக்கூடிய ரத்த சர்க்கரையின் அளவு என்பது 110 mg/dL கீழே இருந்தால் நீரிழிவு நோய் இல்லை என்று பொருள்படும்.

  • 110 mg/dL - 126 mg/dL இருந்தால் prediabetes இருக்கிறது என்று அர்த்தம்.இதனை (impaired fasting glucose) என்று குறிப்பிடுகிறோம்.

  • 126 mg/dL க்கு மேலாக அளவு இருந்தால் இதனை நீரிழிவு நோய் என்று குறிப்பிடுவோம்.

இரண்டாவது:

  • உணவு உண்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, சோதனை செய்யப்படும் ரத்த சர்க்கரையின் அளவு என்பது 146 mg/dL க்கு கீழ் இருந்தால் நீரிழிவு நோய் கிடையாது.

  • 146 mg/dL - 199 mg/dL இருந்தால் prediabetes இருக்கிறது என்று அர்த்தம். இதனை Impaired Glucose Tolerance என்று குறிப்பிடுவோம்.

  • 200 mg/dL இருந்தால் அதனை நீரிழிவு நோய் என்று குறிப்பிடுவோம்.

pre-diabetes உடையவர்கள் முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்கவில்லை எனில், இவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படக்கூடிய சூழல் இருக்கிறது.

Diabetes Reversal

pre-diabetes ஐ பொறுத்தவரை Diabetes Reversal என்ற செயல்முறை இருக்கிறது. நீரிழிவு நோய் என்பது (metabolic disorders ) ஒரு வகையான வளர்சிதை மாற்றக் கோளாறு என்றுதான் கூறவேண்டுமே தவிர அது நோயே கிடையாது என்றுதான் குறிப்பிட வேண்டும்.

4 செயல்முறைகளை பின்பற்றவேண்டும்.

1) உணவு முறை

  • மாவு சத்துப்பொருட்களான (Simple carbohydrates) மைதா, ரவா, நூடில்ஸ் இதுப்போன்ற கார்போஹைட்ரேட்ஸ் எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும்.

  • சிறுநீரக பிரச்னை இல்லையெனில், புரோட்டீன் சார்ந்த உணவுகளை சிறிது அதிகளவில் எடுத்துக்கொள்ளலாம்.

  • இதனை தவிர, வெள்ளை சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை ,பனங்கற்கண்டு, கருப்பட்டி, தேன் என நேரடியாக இனிப்புகள் எடுத்துக்கொள்வதை குறைக்க வேண்டும்.

  • நார்ச்சத்து என்பது அதிகமாக இருக்க வேண்டும். இவை மலச்சிக்கல் பிரச்வை வராமல் தடுக்கவும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்த உதவும். இதனை நாம் சாப்பிடும் உணவுகள், காய்கறிகள், சில பழங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளது.

2) உடற்பயிற்சி:

எந்த உடற்பயிற்சி வேண்டுமானாலும் செய்யலாம்.வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். நடப்பது , நீச்சல் என எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

3) உடல் பருமனை குறைப்பது:

உடல் பருமனை குறைப்பதுதான் pre-diabetes லிருந்து மீள்வதற்கான ஒரே வழி.. இந்தியா நீரிழிவின் தலைநகரமாக மாறிவருகிறது. நமது நாகரீகம் வளர்வதால் உடல் உழைப்பு குறைவாகிக்கொண்டே வருகிறது. வெளியில் செல்வதற்கு கூட வாகனங்களைதான் பயன்படுத்துகிறோம். நடப்பது இல்லை.. மன அழுத்தம், சரியான தூக்கமின்மை இவை அனைத்தும் மனிதர்களை பாதிக்கிறது. இதனால், ஏற்படும் உடல் பருமன் என்பது நீரிழிவு நோயை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிக்கிறது.

எனவே, 5- 10 சதவீதம் வரை ஒருவர் தனது உடல் எடையை குறைக்கவேண்டும் . உதாரணமாக, 70 கிலோ இருந்தால் அதில் 7 கிலோ குறைத்தால் போதுமானது.

4) மன அமைதி

குறைந்தது 7-8 மணி நேரம் உறங்குவது, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மன அமைதியை உண்டாக்குவது .

இது நான்கும் செய்தும் குணமாகவில்லை எனில், Metformin என்ற மாத்திரையை மருத்துவர்களின் சரியான வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.. இவை நான்கையும் செய்தாலே, pre diabets குணப்படுத்தலாம்.

வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்?

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த கட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் மாத்திரை எடுத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்று கூற முடியும்.

30 வயதை கடந்துவிட்டாலே, வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துக்கொள்வதன் மூலம் pre-diabetes கண்டறியப்பட்டால், உணவு, உடற்பயிற்சி, மன அமைதி, எடைகுறைதல் என இவற்றை சரி வர செய்தாலே நீரிழிவு நோய் வராமலே தடுக்கலாம்.

ஒருவர் 2 வருடம் சர்க்கரை வியாதியால் பாதிக்கபட்டு அவரது உடல் எடை அதிகரித்து இருந்தாலே ,அதனை குறைத்தலே, சரி செய்வதற்கான வாய்ப்புகள் என்பது அதிகம்.”