மருத்துவர் மோகன் புதிய தலைமுறை
ஹெல்த்

தினமும் சிகப்பு இறைச்சி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? - மருத்துவர் மோகன் விளக்கம்!

PT WEB

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்கிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு. ஒரு நாளைக்கு 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வழக்கமாக உட்கொள்வதால் அடுத்த பத்து ஆண்டுகளில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு 15% சதவீத வாய்ப்பு ஏற்படுகிறது என்றும், 100 கிராம் பதப் படுத்தப்படாத சிவப்பு இறைச்சியை உட்கொள்வதால் 10% வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இதேபோல கோழி, வான்கோழி அல்லது வாத்து போன்றவற்றின் இறைச்சியை தினசரி 100 கிராம் உண்பது நீரிழிவுக்கான வாய்ப்பை 8% அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

சரி... டைப் 2 நீரிழிவு நோய் என்பது என்ன ?

இது குறித்து மருத்துவர் மோகன் தெரிவிக்கையில், “ரெட் மீட் எனப்படும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிகள் இந்தியாவில் டைப் 2 நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணியாக இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் பிற நோய் பாதிப்புகள் வராமல் இருக்க அவற்றை தவிர்ப்பது நல்லது. அரிசி சார்ந்த உணவு வகைகளை தொடர்ந்து எடுப்பது நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

திட்டமிட்ட உணவுப் பழக்கம், தினமும் உடற்பயிற்சி ஆகியவை நீரிழிவு நோயில் இருந்து நம்மை காக்கும். அல்லது பாதிப்பின் அளவை குறைக்கும்” என்றார்.